நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவையாக விப்ரோவில் ( WIPRO) Graduate Engineer Trainee, Service Desk Analyst, Developer போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்
இன்றைக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பல்வேறு ஐடி நிறுவனங்கள் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்றிற்கு பிந்தையக் காலக்கட்டத்தில் நாட்டின் சேவைத்துறைகள் வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கின்றது. குறிப்பாக 2022 பிப்ரவரியில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்தது) 57.03 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுசென்ற ஆண்டு இதே காலத்தை விட 25.41 சதவீதம் அதிகமாகும். இதோடு இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, அனுபவமிக்க விண்ணப்பதாரர்களை விட, புதியவர்களைப் பணியமர்த்துவதில் விப்ரோ,டிசிஸ், சிடிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்நிலையில் தான் 2022 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் புதியவர்களை பணியமர்த்தும் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலத்தை விட 30 சதவீதம் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில் தற்போது விப்ரோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
WIPRO நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:
பணியிட விபரம் மற்றும் கல்வித்தகுதி:
Graduate Engineer Trainee
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்குத் தொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Service Desk Analyst
இப்பணிக்கு விண்ணப்பிக்கம் விண்ணப்பதாரர்கள் எந்த துறையை சார்ந்த பொறியியல் பட்டதாரிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Developer
கணினி அறிவியல் அல்லது அது தொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
WIPRO நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க முதலில், https://www.wipro.com/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள 'Career' என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
அப்பக்கத்தில் உள்ள ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை இப்பகுதியில் காணலாம்.
இதனையடுத்து நீங்கள் எப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ? அதனைத் தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் அப்பகுதியில் உள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக உள்ளதா? என்பதை ஒரு முறை சரிப்பார்த்துக்கொண்டு ஆன்லைன் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய கடைசி தேதி:
தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இப்பணியிடங்களுக்கு சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களும், இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விப்ரோ போன்ற பெரிய நிறுவனங்களில் பணியில் சேர முடியும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.