தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறைக்கட்டுப்பாட்டில் உள்ள திருநெல்வேலி இந்து சமய உதவி ஆணையர் அலுவலகத்தில் உதவியாளர், ஒட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருந்தால் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும்.


தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சுமார் 4 ஆயிரத்திற்கு மேற்பட்ட கோவில்கள் செயல்பட்டுவருகிறது. இக்கோவில்களை திறம்பட செயல்படுத்துவதற்காக உதவி ஆணையர் இயங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் என்னென்ன தகுதிகள் கொண்டிருக்க வேண்டும்? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.



HRNC திருநெல்வேலி  உதவி ஆணையர் அலுவலக காலிப்பணியிட விபரங்கள்:


அலுவலக உதவியாளர் ( Office Assistant)


கல்வித்தகுதி-


திருநெல்வேலி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் :  மாதந்தோறும் ரூ. 15,700 – 50,000 என நிர்ணயம்.


ஓட்டுநர் (Staff Driver) பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.


இதோடு இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு நல்ல உடற்தகுதியுடன் விண்ணப்பதாரர்கள் இருக்க வேண்டும்.


சம்பளம் : மாதந்தரூ. 19,500 – 62,000


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 1.07.2021 அன்று முதல் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.


ஆனால் BC/MBC/DNC பிரிவினர் 34 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 37 வயது வரை உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எள்றால், தங்களது சுய விவரக்குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.


அனுப்ப வேண்டிய சான்றிதழ்கள்:


விண்ணப்பதாரர் பெயர் மற்றும் முகவரி


எட்டாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றதற்கான சான்றிதழ்கள்.


பள்ளி மாற்று சான்றிதழ்


ஒட்டுநர் உரிமம்


சாதி சான்று நகல்


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவு எண்


குடும்ப அட்டை நகல் மற்றும் இதர தகுதிகள் இருந்தால் அதனையும் இணைத்து அனுப்ப வேண்டும்.


அனுப்ப வேண்டிய முகவரி:


உதவி ஆணையர்,


இந்து சமய அறநிலையத்துறை,


ஏ.ஆர்.லைன் ரோடு,


பாளையங்கோட்டை,


திருநெல்வேலி.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி : ஏப்ரல் 15, 2022


 தேர்வு செய்யப்படும் முறை :


மேற்கண்ட முறைகளில் இந்தப் பணியிடங்களுக்கு  விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://hrce.tn.gov.in//hrcehome/index.php என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாகத் தெரிந்துக்கொள்வோம்.