இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ பொறியியல் பட்டதாரிகளுக்கு பல்வேறு புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ள நிலையில், செப்டம்பர்15 ஆம் தேதிக்குள் தகுதியுடையவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் சமீப காலமாகவே ஐடி எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துறையில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அதிகரித்துவருகிறது. அந்த வரிசையில், முன்னணி தகவல் தொழில்நுட்பமான விப்ரோ  இந்த நிதியாண்டில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணியில் அமர்த்தத் திட்டமிட்டு எலைட் நேஷனல் டேலண்ட் ஹன்ட் 2022’ என அறிவிப்பினையும் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் பொறியியல் பட்டம் முடித்த இளைஞர்களை பணியில் அமர்த்த முடிவு செய்துள்ள நிலையில், ஆண்டுக்கு ரூ 3 லட்சம் முதல் 3.8லட்ச ரூபாய் என சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் விப்ரோ அறிவித்துள்ள இந்த வேலைவாய்ப்பிற்கு என்னென்ன தகுதிகள்? தேவைப்படும் எனவும் அறிந்துக்கொள்வோம்.





கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்டக் கல்லூரிகளில் B.E./B. Tech மற்றும் M.E./M. Tech (5-year integrated course) படித்திருக்க வேண்டும். மேலும் பல்கலைக்கழக சட்டத்தின் படி 60% அல்லது 6.0 என்ற ஒட்டுமொத்த கிரேடு பாயிண்ட் சராசரி (CGPA) அல்லது அதற்கு சமமான மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இது தவிர 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் பேஷன் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங், வேளாண்மை மற்றும் உணவு தொழில்நுட்பத்துறையில் படித்தவர்கள் விப்ரோ அறிவித்துள்ள பணிக்கு விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 25 வயதிற்குள் இருப்பதோடு 2022 ஆம் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


இந்நிலையில் இதற்கான விண்ணப்பதிவு தற்போது துவங்கியுள்ள நிலையில் மேற்கண்ட தகுதியும், ஐடி துறையில் பணியாற்ற ஆர்வமும் உள்ள நபர்கள் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஆன்லைன் மதிப்பீடு மற்றும் வணிக விவாதம் என இரண்டு முறைகளில் நடைபறும் என கூறப்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனம் நடத்தவுள்ள முதற்கட்ட ஆன்லைன் தேர்வு வருகின்ற செப்டம்பர் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.  இந்த தேர்வில், Quantitative Ability , English (verbal) Ability ஆகிய பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். மேலும் ஆன்லைன் தேர்வில் Java, C, C++ or Python உள்ளிட்ட மொழிகளிலும் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்கள் இரண்டாம் கட்ட தேர்வில் கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்படுவார்கள். இறுதியில் விப்ரோ நடத்தும் இரண்டுத் தேர்வுகளிலும் தேர்ச்சிப் பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 லட்சம் ரூ.3.8 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



விப்ரோ நிறுவனத்தில் விண்ணப்பிக்கும் நபர்கள் பிற பொது தகுதிகளைக்கொண்டிருக்க வேண்டும் எனவும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 10 ஆம் வகுப்புக்கும், பட்டப்படிப்புக்கும் இடையில் மூன்று ஆண்டுகள் இடைவெளியில் படித்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.  இதோடு கடந்த 6 மாதங்களில் விப்ரோ நடத்திய எந்தவொரு தேர்வு செயல்முறையை எழுதிய விண்ணப்பத்தாரர்கள் இந்த தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பத்தாார்கள் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் அல்லது இந்திய வம்சாளி ( POI) அட்டை அல்லது வெளிநாட்டு குடியுரிமை அட்டை (OCI) அட்டை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பூடான் அல்லது நேபாளத்தைச்சேந்த விண்ணப்பத்தாரர்கள் இந்த தேர்வுக்கு தகுதியற்றவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.