தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கடந்த 1921 ஆம் ஆண்டு முதல் நாடார் வணிக சமூக வியாபாார நிதி சேவைகளுக்காக  ஆரம்பிக்கப்பட்ட வங்கி, வணிக  மேம்பாட்டிற்காக தமிழ்நாடு மெர்க்கன்டைல் என்ற பெயருடன் செயல்பட்டுவருகிறது. தற்போது இந்தியா முழுவதும் 509 கிளைகளையும், 12 பிராந்திய அலுவலகங்களையும், பதினொரு விரிவாக்கக் கவுண்டர்களையும், ஆறு மத்திய செயலாக்க மையங்களையும், ஒரு சேவை கிளை, 1094 ஏடிஎம்களையும் கொண்டு இயங்கி வருகிறது. மேலும் டிஎம்பி வங்கி இந்தியா முழுவதும் தனது கால்தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. மேலும் இங்கு பல்வேறு துறைளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் தற்போது  Agricultural Officer (Scale-1) விவசாயம், Law Officer (Scale -1) சட்டம் மற்றும் Marketing Officer (Scale-1) சந்தையியல் பிரிவில் காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே வங்கிப்பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  மேலும் மேற்கண்ட ஒவ்வொரு பணிக்கும் வெவ்வேறு தகுதிகள் தேவைப்படும் என்பதால் அவை என்ன என்பது குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.


Agricultural Officer (Scale-1) விவசாய அதிகாரி பணிக்கான தகுதிகள்:


இப்பணிக்கு சேர விரும்பும் நபர்கள் விவசாயத்துறை பாடப்பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்கவேண்டும். மேலும் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கு வேண்டும்.


Law Officer (Scale -1) பணிக்கான தகுதிகள்:


டிஎம்பி வங்கியில் Law Officer (Scale -1 ஆக விரும்புவோர் சட்டத்துறை பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டம் பெந்றிருக்க வேண்டும். மேலும்  விண்ணப்பத்தார்கள் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கு வேண்டும்.




Marketing Officer (Scale-1) பணிக்கான தகுதிகள்:


கலை, வணிகவியல் பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் மற்றும் சந்தையியல், நிதியியல் பிரிவில் முதல்வகுப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 35 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கு வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட ஆர்வமும், தகுதியும் உள்ளநபர்கள், www.tmb.in/careers என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


முன்னதாக என்னென்ன விபரங்கள் கேட்டுள்ளனர், தகுதி போன்றவற்றை முழுமையாக படித்துத்தெரிந்துக்கொள்ள வேண்டும்.


விண்ணப்படிவத்தில் எந்த தவறும் இல்லாமல், என்னென்ன ஆவணங்கள் கேட்டுள்ளார்களோ? அவை அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.


இவ்வாறு உங்களது விண்ணப்பங்களை அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைனின் சமர்ப்பிக்க வேண்டும்.


தேர்வு முறை: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தார்களுக்கு வீடியோ கான்பிரசிங் மூலம் நேர்முகத்தேர்வு நடைபெறும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.