பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்முறையாக துவங்கப்பட்டது. அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில் ஓதுவார் மூன்று வருடங்களாக பயிற்சிப் பள்ளி துவங்கப்பட்டது. இந்த ஓதுவர் பயிற்சி பள்ளியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது, குறைந்த அளவில் மூன்று மாணவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கப்பட்டு ஓதுவார் பாடசாலையில் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2017-ஆம் ஆண்டு இறுதியில் இவர்களுடைய ஓதுவர் பயிற்சியை முடித்துள்ளனர். அதன் பின்னர் ஓதுவார் பயிற்சிப்பள்ளி நடத்தவில்லை.  சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த ஓதுவார் பயிற்சி பள்ளியில் பயின்ற மூன்று மாணவர்களில் அண்ணாமலை என்ற மாணவர் மட்டும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓதுவார் பணிநியமனம் செய்யப்பட்டதில் கோவிலில் வேலை கிடைத்து, ஓதுவாராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.




அதனைத்தொடர்ந்து இன்று  தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர்   திருக்கோயில்களில் திருமுறைகளை குறைவின்றி ஓதிட ஏதுவாக திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சார்பாக  பயிற்சிப்பள்ளி நடைபெற்று வருகிறது. அரசு அரசாணைப்படி 3 ஆண்டுகள் நடைபெறும். இதில் பயிற்சி பெற விரும்பும் இந்து மதத்தை சேர்ந்த தகுதியுடையவர்கள் உரிய விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் விளம்பரம் அறிவிக்கப்பட்டுள்ளது. 



 


இதற்கான மாணவர் சேர்க்கைக்கான தகுதிகள்;


1.இந்த ஓதுவார் பயிற்சியில் சேர எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் போதுமானது.
2. இதில் சேரும் விருப்பம் உடையவர் குறைந்தபட்சம் மாணவர்களின்  13 வயது நிரம்பியவர்கள் இருந்து அதிகபட்சமாக 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் இருக்க வேண்டும்
3. இயற்கையாகவே சாரீரமும் குரல்வளம் உடல் வளமும் பெற்று இருத்தல் வேண்டும் சமய தீட்சை பெற்றிருத்தல் வேண்டும்
4. பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆகியவர்கள் ஒருவரைக் கொண்டு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும்.
5. பயிற்சி நிலையத்தில் பயில விரும்பும் மாணவர்களுக்கு சமயம் கோட்பாடுகளை கடைபிடிப்பவர்களாக இருத்தல் வேண்டும்


6. பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு உறைவிடம் சீருடை பயிற்சி காலத்தில் உதவித்தொகை ( 3000) ரூபாய் ஆகியவற்றை வழங்கப்படுகின்றது.  இதுபோன்ற 6 தகுதிகள் உடையவர்களை மட்டுமே ஓதுவர் பயிற்சி பள்ளியில் சேரமுடியும் எனவும் , இதற்கான விண்ணப்பங்கள் அக்டோபர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி ஓதுவர் பயிற்சிப்பள்ளி இணை ஆணையர் அலுவலர் அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் திருவண்ணாமலை என்னும் முகவரிக்கு அனுப்பவேண்டுமென தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  



 


ஓதுவார்கள் கோவில்களில் செய்யக்கூடிய பணிகள்;


 ஓதுவார் என்போர் தமிழகத்தில் உள்ள சைவ சமய ஆலயங்களில் தேவார திருவாசகப் பண்களைப் பாடும் பணியில் தம்மை அர்ப்பணித்த இறைத்தொண்டர்கள் ஆவார். முற்காலத்தில் மன்னர்கள் ஓதுவார்களுக்கு நிலம் அளித்து ஆதரித்தனர். பரம்பரை பரம்பரையாக ஓதுவார்கள் திருமுறைப் பண்களைப் பாடி வந்தனர். காலப்போக்கில் இந்‌நிலை மாறி ஓதுவார் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே தமிழக அரசு சென்னை, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் பழனி முருகன் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் ஆகிய இடங்களில் ஓதுவார் பயிற்சி மையங்‌களைத் துவங்கியது. இம்மையங்களில் சேர்ந்து பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது