இந்திய வடக்கு ரயில்வே துறையில் காலியாக 3093 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவில் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ரயில்வே என நான்கு மண்டலங்களாகப்பிரிக்கப்பட்டு இந்திய ரயில்வே துறை இயங்கிவருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மற்ற அரசு வேலைகளை விட இந்திய ரயில்வே துறையில் தான் அதிகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிறது. இதன் காரணமாகவே இந்திய ரயில்வேதுறையில்  எப்பொழுது புதிய வேலைக்கான அறிவிப்பு வெளியாகும் என்று காத்திருக்கின்றனர் இன்றைய இளைஞர்கள். மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஆர். ஆர்.பி ரயில்வே வேலைகளுக்கு லட்சக்கணக்காக தொழில்நுட்ப மற்றம் தொழில்நுட்பமற்ற பணிக்களுக்கான ஆள் சேர்ப்பு நடைபெற்றுவருகிறது. குறிப்பாக எந்தவித தேர்வும் இல்லாமல் அவ்வப்போது வேலை வாய்ப்பு அறிவிப்பும் வெளியாகக்கூடும். இந்த வரிசையில் தற்போது வடக்கு ரயில்வே துறையில் பல்வேறு துறைகளில் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி? எப்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என இங்கே தெரிந்துக்கொள்வோம்.


 






கல்வித்தகுதி: ரயில்வே துறையில் பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் ஐ.டி.ஐ முடித்திருப்பது அவசியம்.


வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 15 வயதுக்கு குறையாமலும் 24 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:  மேற்கண்ட தகுதியும் ஆர்வமும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், http://www.rrcnr.org என்ற இணைதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் கடந்த செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் தொடங்கிய விண்ணப்பபதிவு  அக்டோபர் 20 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பக்கட்டணம்: இரயில்வே துறையில் அப்ரன்டிஸாக விண்ணப்பிக்க விரும்பும் பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 100 யை விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனின் செலுத்த வேண்டும். மேலும் அரசின் தேர்வு விதிமுறைகளின் படி எஸ்.சி, எஸ்.டி மற்றும் பெண்கள் விண்ணப்பத்தார்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.


தேர்வு செய்யும் முறை: இதில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எந்தவிதத் தேர்வும் கிடையாது. ஆனால் பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐயில் தேர்வில் பெற்ற 50 சதவீதம் பெற்றிருக்கும் நபர்கள் வடக்கு ரயில்வேயில் அப்ரசன்டிஸாக பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





எனவே இரயில்வே துறையில் தான் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் உள்ள நபர்கள் உடனடியாக இந்த அறிவிப்பைப்பயன்படுத்திக்கொள்ளலாம். தற்போது  அப்ரண்டிஸ் ACT 1961 வடக்கு ரயில்வே துறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 3093  அப்ரண்டிஸ் பணிகளுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.