புதுச்சேரியில் செயல்பட்டுவரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நிரப்பப்படவுள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே கலை மற்றும் பொறியியல் பிரிவில் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகள் அக்டோபர் 11-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருக்கும் திருவேட்டக்குடியில் புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரி அமைந்துள்ளது. மத்திய அரசால் ஒப்புதல் பெற்ற 10 பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்றாக திறம்பட செயல்பட்டுவருகிறது. மேலும் இங்கு இளங்கலை மற்றும் முதுகலைப்பிரிவில் கணினி பொறியியல், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல், மின்சார மற்றம் மின்னணு பொறியியல், இயந்திரவியல் பொறியியல் துறையின் கீழ் பல மாணவர்கள் பயின்றுவருகின்றனர். மேலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் பலர் பணியாற்றிவரக்கூடிய நிலையில், தற்போது புதுச்சேரி தொழில் பல்கலைக்கழகத்தில் உதவிப்பேராசிரியர் ஆவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களுக்கு என்னென்ன தகுதிகள் என தெரிந்துகொள்வோம்.
Assistant Professor Grade II பணிக்கான தகுதிகள்:
புதுச்சேரி என்ஐடியில் 8 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்கள் பொறியியல்துறையில் சிவில், சிஎஸ்இ, இசிஇ, EEE, மெக்கானிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பியல், வேதியியல், கணிதவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் என்ஐடி விதிமுறைகளின் படி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: எனவே மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் www.nitpy.com என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற அக்டோபர் 11 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதனையடுத்து உங்களது விண்ணப்பபடிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
National Institute of Technology ,
Puduchery Thiruvettakudy,
Karaikal -609609 என்ற முகவரிக்க வருகின்ற அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எந்தவித விண்ணப்பக்கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யும் முறை:
புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணிபுரிவதற்காக விண்ணப்பத்த நபர்களுக்கு முதலில் எழுத்துத்தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தேர்வாகும் நபர்களுக்கு நேர்முகத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும்.
இந்த மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே உதவிப்பேராசிரியராக பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொறியியல் மற்றும் கலை மற்றும் அறிவியல் துறையில் தேர்ச்சிபெற்ற பட்டதாரிகள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விபரங்களை www.nitpy.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.