தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 119 உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நியமனத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழக அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களை தேர்வு செய்ய மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தினை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தத் தொடங்கியது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியத்தை நிர்வகிக்க ஒரு தலைவர், ஒரு உறுப்பினர், ஒரு உறுப்பினர் செயலர் மற்றும் 19 பணியாளர்களைக்கொண்டு செயல்பட்டுவருகிறது. இதன் மூலம் அவ்வப்போது தேர்வுகளின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில் தற்போது உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கான நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு என்னென்ன தகுதிகள்? வயது வரம்பு? சம்பள விவரம் போன்றவற்றை இங்கே முழுமையாக அறிந்துகொள்ளுங்கள்.
தமிழக அரசின் உணவு பாதுகாப்பு அதிகாரி பணிக்கான தகுதிகள்:
கல்வித்தகுதி : ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க ஆரம்ப மற்றும் கடைசி தேதி – உணவு பாதுகாப்பு அதிகாரியாக விண்ணப்பிக்க வேண்டும் எனில் நாளை முதல் வருகின்ற அக்டோபர் 21 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
முதலில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.mrb.tn.gov.in என்ற பக்கத்திற்கு சென்று MRB Notofication 2021 என்பதை படித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பின்னர் www.mrb.tn.gov.in பக்கத்தில் உள்ள TN MRB Recruitment 2021 Application form யை பதிவிறக்கம் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விபரங்களை எந்த தவறும் இல்லாமல் நிரப்பப்பட வேண்டும்.
முன்னதாக அடையாள அட்டை, கல்வித்தகுதி சான்றிதழ், சமீபத்தில் எடுத்த புகைப்படம், பணி முன் அனுபவம், போன்றவற்றை ஸ்கோன் செய்து வைத்துக்கொண்டு சரியாக நிரப்பி அதனை ஆன்லைன் மூலமான அனுப்ப வேண்டும். குறிப்பாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் உங்களுக்கு அறிவிப்பு தெரிவிப்பதற்கு ஏற்றவாறு சரியான மெயில் ஐடி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை விண்ணப்பத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் : உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு விண்ணப்பிக்க நினைக்கும் பொதுப்பிரிவினருக்கு ரூபாய் 700 மற்றும் எஸ்.சி/ எஸ்.சி.ஏ/ டிஏபி (பிஎச்) பிரிவினருக்கு ரூபாய் 300 விண்ணப்பக்கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ந்தெடுக்கும் முறை: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தகுதியான நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் கம்யூட்டர் தேர்வு நடைபெறும். மேலும் இந்ததேர்வு உத்தேசமாக நவம்பர் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் - குறைந்தபட்சம் ரூ.35,900/- முதல் அதிகபட்சம் ரூ.1,13,500/- வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை http://www.mrb.tn.gov.in/ என்ற இணையத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.