பிரசார் பாரதியில் multimedia journalist பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில் ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 28 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக பிரசார் பாரதி செயல்பட்டுவருகிறது. இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை அமைச்சகத்தினால் தனிச்சட்டம் இயற்றப்பட்டு  அகில இந்திய வானொலி பிரசார் பாரதியின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. மேலும் 7 பிரசார் பாரதியின் மூலம் தூர்தர்ஷன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தொலைக்காட்சிகள், ஆல் இண்டியா ரேடியோ, எஃப் எம் ரெயின்போ உள்ளிட்ட வானொலி நிலையங்கள் நூற்றுக்கணக்கில் செயல்பட்டுவருகிறது. இங்கு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் நிலையில் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்கள் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் சிலர் தொகுப்பூதியத்தின் அடிப்படையிலும் பணியாற்றிவரும் நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.



multimedia journalist பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று வெளியாகியுள்ள அறிவிப்பில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் டிகிரி முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க வேறு என்ன தகுதிகள்? வயது வரம்பு? என்ன என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.


இந்திய வானொலி நிறுவனப் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 8


சென்னை - 3


மதுரை – 1


திருச்சி – 1


கோயம்புத்தூர் -1


சேலம் – 1


திருநெல்வேலி -1


வயது வரம்பு :


விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 35-க்குள் இருத்தல் வேண்டும்.


கல்வித்தகுதி:


இந்திய வானொலி நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


மேலும் PG Diploma in journalism முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்


இதர தகுதிகள்:


இதோடு இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் சரியான உச்சரிப்பு திறன் இருக்க வேண்டும்.


முக்கியமான நபர்களை நேர்காணல் செய்யும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.


தமிழ் மற்றும் ஆங்கில  மொழிகளில் புலமை பெற்றவராகவும் இருக்கும்.


இது மட்டுமின்றி சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது மூன்று ஆண்டு முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://applications.prasarbharati.org/ என்ற இணையதளப்பக்கத்திற்கு சென்று முதலில் ரிஜிஸ்டர் செய்துக்கொள்ள வேண்டும்.


தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் முறையின் மூலம் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


நேர்காணல் நடைபெறும் இடம் –  ஜனவரி 28, 2021


நேர்காணல் நடைபெறும் நேரம் -  காலை 10 மணிக்கு


நேர்காணல் நடைபெறும் இடம்


DD News,


 Doordarshan Kendra,


 5 Sivananda Salai,


Chennai – 600005


சம்பள விபரம்:


நேர்காணலில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/01/NIA-dated-11.01.2022-%E2%80%93-8-MMJ-for-Tamil-Nadu-notice-2-files-merged.pdf  என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.