விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலக உதவியாளர் நிலையில் உள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
அலுவலக உதவியாளர்
ஈப்பு ஓட்டுநர்
மொத்த பணியிடம் - 24
பணியிட விவரம்
காணை, கண்டமங்கலம்,மரக்காணம், முகையூர், ஓலக்கூர், திருவெண்ணெய்நல்லூர், விக்கிரவாண்டி, மேல்மனையனூர், மயிலம், செஞ்சி, கோலியனூர், கண்டமங்கலம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள அலுவலகங்களில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு விவரம்
01.07.2023 -ன்படி 18 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மிதி வண்டி அல்லது இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
1. அலுவலக உதவியாளர் – ரூ.15700 – 50,000/- |
2.ஈப்பு ஓட்டுநர் – Rs.19500 – 62000/- |
விண்ணப்பிக்கும் முறை:
https://viluppuram.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பெறலாம். அஞ்சல் மூலம் பூர்த்தி செய்யப்பட்ட விண்னப்பத்தை வழங்க வேண்டும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களை https://viluppuram.nic.in/notice_category/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.11.2023
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
ஆணையாளர்,
ஊராட்சி ஒன்றியம்,
ஊராட்சியின் பெயர்
விழுப்புரம் - 604 652
சென்னை கணித நிறுவனத்தில் வேலை
சென்னை கணித நிறுவனத்தில் (The Institute of Mathematical Sciences) காலியாக உள்ள Deputy Controller Of Accounts பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Deputy Controller Of Accounts
கல்வி மற்றும் பிற தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு துறையில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
நிதி மேலாண்மை, திட்டமிடுவது, நிர்வாக திட்டமிடல், நிதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தெரிந்திருக்க வேண்டும்.
குறைந்தது 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். எட்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் அதற்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும்.
இந்த நிறுவனத்தின் நிதி நிர்வாகம் சார்ந்த பணிகள் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஊதிய விவரம்
7-வது மெட்ரிக்ஸ் லெவல் -11-ன் படி மாத ஊதியம் வழங்கப்படும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்ப கட்டணமாக 500-ரூபாய் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.imsc.res.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணைதள முகவரியின் வேலைவாய்ப்பு பக்கத்தில் ‘Recruitment of Deputy Controller of Accounts' என்றிருக்கும். அதை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களை அப்லோடு செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
https://naukri.imsc.res.in/dca/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணபிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.12.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://www.imsc.res.in/~office/jobs/imsc-dca-14nov2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.