பிரசார் பாரதியின் செயலகத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், கணினி துறையைச்சேர்ந்தப் பட்டதாரிகள் அக்டோபர் 10-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிரசார்பாரதி செயல்பட்டுவருகிறது. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தினால் தனியாகச்சட்டம் இயற்றப்பட்டு தன்னிச்சையாக செயல்படக்கூடிய அமைப்பாக இயங்கிவருகிறது. இந்த பிரசார்பாரதி செயலகத்தின் கீழ், தூர்தஷன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டுகிறது. தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய இங்கு  ப்ரோகிராமர், கேமராமேன், செய்தியாளர் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது தற்காலிக அடிப்படையில் பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகிவரும் நிலையில் தற்போது பிரசார் பாரதி செயலகத்தில், Programmer I& II, Mobile Application Developer, Software  Tester பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை என்ன என்பது குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.



பிரசார் பாரதியின் Programmer I& II பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதிகள்: `


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்ப பிரிவில் பி.டெக் அல்லது எம்சிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஏஐசிடிஇ, யுஜிசி அங்கீகாரம் பெற்ற புரோகிராமிங் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான சம்பளம் மாதம் ரூபாய் 32 ஆயிரத்து 500 முதல் 40 ஆயிரம் வரை  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Mobile Application Developer பணிக்கான தகுதிகள் :


பிரசார் பாரதியின் செயலகத்தில் இரு Mobile Application Developer பணி காலியாக உள்ளதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  35 வயதிற்குள் இருப்பதோடு, மென்பொருள் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதோடு சம்பந்தப்பட்ட துறைகளில் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாதம் ரூ. 37 ஆயிரத்து 500 முதல் 45 ஆயிரம் வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Software  Tester பணிக்கானத் தகுதிகள்: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயது நிரம்பி இருக்கு வேண்டும். மேலும் கணினி அறிவியல் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதோடு மூன்று ஆண்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


எனவே மேற்கண்ட பணிகளுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ள நபர்கள், https://applications.prasarbharathi.org என்ற இணையதளத்தின் மூலம் வருகின்ற அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனையடுத்து இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு  நடைபெறும் எனவும் அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இப்பணிக்குறித்த கூடுதல் விபரங்களை https://applications.prasarbharathi.org என்ற பக்கத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பைப் பார்த்து முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.