இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை உறுதிசெய்யும் வகையில் அஞ்சல் துறையின் மூலம் ப்ரான்ச்சைஸர் பணியை இந்திய அரசு நடைமுறைப்படுத்திவருகிறது. இப்பணிக்கு 18 வயது நிரம்பிய அனைவரும் விண்ணப்பிக்க முடியும்.


இன்றைய சூழலில் வேலை எதுவும் கிடைக்காமல் பல பட்டதாரிகள் ஏதாவது தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என எண்ணத்தோடு வாழ்ந்து வருகின்றனர். ஆனால் என்ன செய்வது? நிறைய முதலீடு செய்ய வேண்டி இருக்குமோ? என்று பலர் தங்களது கனவைத் தொலைத்து விடுகின்றனர். இதுப்போன்றுள்ள் இளைஞர்களுக்கெல்லாம் வாய்ப்பு அளிக்கும் விதமாக தான் இந்திய அஞ்சல் துறையில் ப்ரான்ச்சைஸ் பணி காத்துள்ளது. அப்படின்னா என்ன? இதற்கான தகுதிகள் என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





நாடு முழுவதும் அனைத்து கிராமப்பகுதிகளுக்கு அஞ்சல் சேவை வசதிகளை அதிகரிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த ப்ரான்ச்சைஸ் பணி. குறிப்பாக இந்தியா முழுவதும் 1.55 லட்சம் அஞ்சல் அலுவலகங்கள் உள்ள நிலையில் அனைத்துப் பகுதிகளுக்கும் ஊழியர்கள் சென்றுவிடமுடியாது. எனவே அதுப்போன்ற இடங்களில் பணிபுரிவதற்காகத் தான் அஞ்சல் துறையில் ப்ரான்ச்சைஸ் பணி தொடங்கப்பட்டது. இந்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் ரூ.5 ஆயிரம் முதலீடாக செலுத்தி இந்த வேலையைத்தொடங்கலாம். இவ்வாறு சேரும் நபர்கள் போஸ்டல் ஏஜென்டாக பணியாற்றலாம்.


 கல்வி தகுதி மற்றும் சம்பள விபரம்!


அஞ்சல் துறையின் ப்ரான்ச்சைஸ் பணிக்கு சேரவிரும்பும் நபர்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் இச்சேவையைப் பெறலாம்.


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருப்பதோடு குறைந்தபட்ட கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். இத்தகைய தகுதியுள்ள நபர்கள் அஞ்சல் அலுவலகத்தில் இதுக்குறித்த தகவல்களைப்பெற்று, இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து தகுதிவாய்ந்த நபர்களை தலைமை அஞ்சல் அதிகாரியால் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நபர்கள், பில் கலெக்சன்ஸ், ஸ்டாம்ப்ஸ் சேல்ஸ், ஸ்பீடு போஸ்ட், இன்சுரன்ஸ், பார்சல் புக்கிங் எடுக்கலாம். இந்தப்பணிகளின் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். குறிப்பாக ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தால் ரூ.3 கமிஷன் கிடைக்கும். ஸ்பீடு போஸ்ட்க்கு கமிஷனாக ரூ. 5கிடைக்கும். இதுப்போன்று பலவற்றிற்கு அவர்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்றவாறு கமிஷன் தொகை சம்பளமாக வழங்கப்படும்.





மேலும் போஸ்டல் ஸ்டாம்ப் மற்றும் போஸ்டல் கவர்கள் மற்றும் மணி ஆர்டர் பார்கள் விற்பனை செய்தால் அதன் மூலம் வருமானம் கிடைக்கும். எனவே வேலையில்லை என நினைக்கும் பலர்கள் குறைந்த முதலீட்டில் அஞ்சல ப்ரான்ச்சைஸ் பணியைத்தேர்ந்தெடுக்கலாம். தற்போது  வங்கியை விட பெரும்பாலான கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் அஞ்சல் சேவையைத்தான் மக்களில் பலர் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.