வ.உ.சிதம்பரனார் துறைமுக வேலைவாய்ப்பு


தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 




பணி விவரம்:


இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist)


மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary)


வயது வரம்பு:


இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • இணை முதன்மை மருத்துவர் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள். 

  • மூத்த உதவி செயலாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  • விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  • Absorption / Deputation முறையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். 


பணி காலம்:


இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும். 


ஊதிய விவரம்:


அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் 1,80,000 வரை இதற்கு ஆரம்ப கால  ஊதியமாக வழங்கப்படும். (ரூ.20,600-46,500 prerevised / ரூ. 10750-16750 pre-pre-revised))


எப்படி தேர்வு செய்யப்படுவர்:


இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


கவனிக்க..


இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம். 


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/applications.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20spl%2024-11-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.


மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Filling%20up%20of%20the%20post%20SRAS%20absorption%20deputation.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.01.2024


* காப்பீட்டு முகவராக விருப்பமா? - வரும் 27-ம் தேதி நேர்காணல்


அஞ்சல் துறையில் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக (Postal Life Insurance / Rural Postal Life Insurance products) புதிய நேரடி முகவர்களுக்கான (Direct Agents)வேலைவாய்ப்பு அறிவிப்பினை சென்னை மத்திய கோட்டம் அலுவலகம் வெளியிட்டுள்ளது.


இது தொடர்பாக முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை காணலாம்.


பணி விவரம்:


 காப்பீட்டு முகவர்கள்


கல்வி தகுதி: 


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவர்களாகவும் 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.


பிரிவுகள்:


சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணி புரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருப்பவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினி பயன்படுத்த தெரிந்தவர்கள் சொந்த பகுதியில் வசிப்பவர்கள் அதை பற்றி நன்கு அறிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, இந்தப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.  


எப்படி விண்ணப்பிப்பது?


விருப்பமுள்ளவர்கள் செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம், சென்னை 600016 (ஆலந்தூர் மெட்ரோ அருகில்) உள்ள அலுவலகத்தில்  27.12.2023 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம். நேர்காணலுக்கு வருபவர்கள் மூன்று புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு),  வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்வி சான்றிதழ் ஆகியவற்றின் நகல்கள் இரண்டு உள்ளிட்டவற்றை எடுத்து செல்ல வேண்டும்.


நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை (National Savings Certificate (NSC)/KisanVikasPatra (KVP) பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.


இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது.  


இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் ஆயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.


முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் வாடிக்கையாளர்களின் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும் என்று சென்னை மத்திய கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆல் தி பெஸ்ட்..


நேர்காணல் நடைபெறும் இடம்:


செயின்ட் தாமஸ் மௌன்ட் தலைமை அஞ்சலகம்,


சென்னை 600016 (ஆலந்தூர் மெட்ரோ அருகில்)


நேர்காணல் நடைபெறும் நாள் - 27.12.2023