சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அலுவகத்தில் வேலைக் காத்திருக்கிறது.  சமூக ஊடகங்களில் கண்டன்ட் ஒருங்கிணைப்பாளாராக (STRATEGIC CONTENT COORDINATION ASSISTANT - OPEN TO ALL INTERESTED CANDIDATES (COMMUNITY MANAGEMENT COORDINATOR (SOCIAL MEDIA)) பணி புரிய வாய்ப்பு.


அமெரிக்க தூதரகத்தின் சமூக ஊடகளில் கண்டன்ட்களை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும், யு.எஸ் மிஷன் நோக்கங்களை மேம்படுத்துவதற்கும் ,ஆன்லைன் உரையாடல்களை ஒழுங்கமைத்து ஹோஸ்ட் செய்வதற்கும் பொறுப்பான தகுதியானவை அமெரிக்க தூதரகம் தேடி வருகிறது.


தகுதிகள்:


அனுபவம்: பன்மொழி, பன்முக கலாச்சாரம் அல்லது பன்னாட்டு நிறுவனத்தில் குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் பணி செய்த அனுபவம் தேவை. சந்தை ஆராய்ச்சி மற்றும் பார்வையாளர்களின் தேவை குறித்த ஆய்வு செய்தல் மற்றும் ஆன்லைன் பிரச்சாரங்களை வடிவமைப்பது மற்றும் செயல்படுத்தல் போன்ற பணிகளை செய்ய வேண்டும். பொதுமக்களுடன் நேரடி ஆன்லைன் தொடர்பு, மல்டிமீடியா மற்றும் பாரம்பரிய வடிவங்களில் கண்டன்ட்களை உருவாக்குதல் உள்ளிட்ட டிஜிட்டல் ப்ளாட்ஃபாம்களை நிர்வகித்திருக்கும் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


 கல்வித் தகுதிகள்:


தொடர்பியல், பிசினஸ், மார்க்கெட்டிங், அரசியல் அறிவியல் ஆகிய துறைகளில் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டியது கட்டாயம். (பேசுதல்/படித்தல்/எழுதுதல்)


தமிழ் அல்லது மலையாளம் அல்லது கன்னடத்தில் பேசுதல்,படித்தல்,எழுதுதல் ஆகியவையும் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்.  


விண்ணப்பதாரர்கள் அனைவரும் உடல்ரீதியிலாக  மருத்துவ தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்தியாவில் வேலை செய்வதற்கு எந்தவித தடையும் இல்லை என்ற சான்றிதழ், மற்றும் பாதுகாப்பு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.


இந்த பணிக்கு விண்ணபிக்க விரும்புவோர்கள், விண்ணப்ப படிவத்துடன் கல்வி, அனுபவம், பாதுகாப்பு உள்ளிட்டவைகள் தொடர்பான ஆவணங்களை உடன் இணைக்க வேண்டும்.


மேலும் விவரங்களுக்கு, https://in.usembassy.gov/embassy-consulates/chennai/    என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். 


விண்ணபிக்க:- bit.ly/35yIfU7