மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்.
மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறையின் கீழ் இஞ்சினியர்ஸ் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1965 ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் சுமார் 3 ஆயிரம் பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்தியாவில் முக்கிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக இஞ்சினியர்ஸ் இந்தியா கடந்த ஆண்டு சுமார் 3 ஆயிரம் கோடி அளவிற்கு வருமானத்தை ஈட்டியுள்ளது. இவ்வாறு பல கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் இந்நிறுவனத்தின் கீழ் பணியாற்றுவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. Management Trainees என்ற பணிக்கு பி.இ, பிடெக் முடித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதி தேவை? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.
இன்ஜினியர்ஸ் இந்தியா நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 75
துறைவாரியாக காலிப்பணியிட விபரம்:
மெக்கானிக்கல் - 35
எலக்ட்ரிகல் - 13
சிவில் - 12
Instrumentation - 9
கெமிக்கல் – 6
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 65 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ. அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பொதுப்பிரிவினருக்கு 25 வயது
ஓபிசி பிரிவினருக்கு 28 வயது
எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், www.engineersindia.com என்ற இணையதளப்பக்கத்திற்கு முதலில் செல்ல வேண்டும்.
பின்னர் அப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தில், பணிக்கு கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்ய வேண்டும்.
இதோடு விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : ஆன்லைன் வாயிலாக வருகின்ற மார்ச் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், அவர்களின் கல்வி தகுதி, GATE 2022 -ல் பெற்ற மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசுப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனடியாக விண்ணப்பித்துப்பயன்பெறுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://recruitment.eil.co.in/hrdnew/mt/Advertisement_GATE_2022.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.