ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வு மூலம் (COMBINED MEDICAL SERVICES EXAMINATION, 2024) காலியாக உள்ள மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை யு.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. 30-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்


மருத்துவ அதிகாரி




பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை - 827


கல்வித் தகுதி :


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து எம்.பி.பி.எஸ். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


வயதுத் தகுதி : 


18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.  ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்


ரூ. 56,100-1,77,500  மாத ஊதியம் வழங்கப்படும்.


விண்ணப்ப கட்டணம்:


விண்ணப்பக் கட்டணமாக ரூ.200 ஆன்லைனில் செலுத்த வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம் குறித்த விவரங்கள்:


இதற்கான விண்ணப்பக் கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டணத் தொகையை BHIM UPI, ஆன்லைன் பேங்கிங் ஆகியவற்றின் மூலமும்,  Visa, Mastercard, Maestro, RuPay ஆகிய நிறுவனங்களின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலமாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பணச்சீட்டு மூலமாகவும் செலுத்தலாம். அதேநேரம் பெண் தேர்வர்கள், பட்டியலின/  பழங்குடியினர் பிரிவு, மாற்றுத் திறனாளிகள், ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை


 எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை : 


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.upsconline.nic.in- என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2024


இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Notifica-CMSE-2024-engl-100424.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.




மேலும் வாசிக்க..


TN MRB Recruitment: 2,553 பணியிடங்கள்;எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்?


IIT Recruitment: ஐ.ஐ.டி.யில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஊதியம் எவ்வளவு?