சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


குரூப் ஏ


டெக்னிக்கல் அதிகாரி (Technical Officer) - 8


குரூப் பி 


Junior Technical Superintendent - 12


மொத்த பணியிடங்கள் - 20


கல்வித் தகுதி:



  • குரூப் ஏ பிரிவில் விண்ணப்பிக்க எம்.டெக்., பொறியியல் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 

  •  Junior Technical Superintendent பணிக்கு விண்ணப்பிக்க பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.டெக்., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ. உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு விவரம்:


குரூப் ஏ - 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


குரூப் பி - 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தெரிவு செய்யும் முறை:


எழுத்துத் தேர்வு, ஸ்கில் டெஸ்ட், ட்ரேட் டெஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை: 


https://recruit.iitm.ac.in/ - என்ற இணையதள முகவரியில் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


இ-மெயில் மூலம் தொடர்பு கொள்ள- recruit@iitm.ac.in 


விண்ணபிக்க கடைசி தேதி - 24.04.2024 மாலை 05.30 மணி வரை 


இது தொடர்பான மேலதிக விவரங்களுக்கு https://recruit.iitm.ac.in/include/R424_Detailed_Advt.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.