மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மொத்த பணியிடங்கள்: 37 

பணி விவரம்:

இன்பர்மேசன் சர்வீஸ், பிளையிங் டிரைனிங், சயின்டிபிக் ஆபிசர், அசிஸ்டென்ட் இயக்குநர், எக்சிகியூட்டிவ் இன்ஜினியர், போட்டோகிராபிக் ஆபிசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வித் தகுதி:

ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். வயது வரம்பு: 1.9.2022 தேதியின்படி கணக்கிடப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

https://upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணபிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ரூ. 25.அன்லைனில் மூலமாக செலுத்த வேண்டும். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பக் கட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) வங்கியில் டிமாண்ட் டிராஃப்ட் அல்லது ஆன்லைன் பேங்கிங் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022

அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முழு விவரம் அறிய https://www.upsc.gov.in/sites/default/files/Advt-No-15-2022-engl-120822.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

ஆல் தி பெஸ்ட்...


மேலும் வாசிக்க. ICFRE: வன பல்லுயிர் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..10-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.. உடனே அப்ளை பண்ணுங்க..

மேலும் வாசிக்க-NMDC: தேசிய கனிம வளர்ச்சி கழகத்தில் 10-ம் வகுப்பு டிகிரி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம்...

மேலும் வாசிக்க-Netflix: வீடியோ கேம் துறையில் அசத்தப்போகும் நெட்பிளிக்ஸ்.. இத்தனை பேருக்கு வேலையா? சூப்பர் அறிவிப்பு..