பிரபல பொதுத் துறை வங்கியான இந்திய யூனியன் வங்கியில், உள்ளூர் வங்கி அலுவலர் பணிக்கான 1500 காலி இடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (நவம்பர் 13) கடைசித் தேதி ஆகும்.
நாடு முழுவதும் ஆந்திரா, அசாம், குஜராத், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக 1500 உள்ளூர் வங்கி அலுவலர் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. எந்த பட்டப் படிப்பை முடித்தவர்கள் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு நவம்பர் 13 கடைசி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் யாருக்கு எவ்வளவு இடங்கள்?
இதில் தமிழ்நாட்டில் 200 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. எஸ்சி இடங்களுக்கு 30, எஸ்டி பணிகளுக்கு 15, ஓபிசி இடங்களுக்கு 54 ஆகியவை நிரப்பப்பட உள்ளன. பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு 20 பணியிடங்கள், ஒதுக்கீடு இல்லாதவர்களுக்கு 81 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
ஊதியம் எவ்வளவு?
உள்ளூர் வங்கி அலுவலர் (Local Bank Officer LBO) பணி இடங்களுக்கு ரூ.48,480 – ரூ.85,920 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முறை
* ஆன்லைன் தேர்வு / குழு விவாதம்
* நேர்காணல் தேர்வு
தமிழ்நாட்டில் உள்ள தேர்வு மையங்கள்
சென்னை, கோவை, கடலூர் ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில்/ கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
பொதுப் பிரிவினருக்கு- ரூ.850
எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளி பிரிவினருக்கு – ரூ.175
தேர்வு முறை என்ன?
விண்ணப்பிப்பது எப்படி?
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் https://www.unionbankofindia.co.in என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
அதில், https://ibpsonline.ibps.in/ubilbooct24/ என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
முன்னதாக, https://ibpsonline.ibps.in/ubilbooct24/basic_details.php என்ற
யூனியன் வங்கி அறிவிக்கையைக் காண: https://www.unionbankofindia.co.in/pdf/NOTIFICATION-OF-LBOs-FINAL.pdf