இந்திய யூனியன் வங்கியில் காலியாக உள்ள Executive/Specialist Officers/Domain Expert  போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு   வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


இந்தியாவின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இந்திய யூனியன் வங்கி (Union Bank of India) இயங்கி வருகிறது.  இது மும்பை நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் நிலையில்,  அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம், மற்றும் ஷாங்காய், சீனா போன்ற நாடுகளில் பிரதிநிதித்துவ அலுவலகங்களையும், மற்றும் ஹாங்காங்கில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது. இங்கு பல்வேறு துறைகளில் பலர் பணிபுரிந்துவரும் நிலையில் தற்போது பல்வேறு பிரிவுகளில் Specialist Officers பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கானத் தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.





இந்திய யூனியன் வங்கியில் ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்ஸ் பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 25


காலிப்பணியிடங்கள் பட்டியல்கள்:


Digital Team


Senior Manager (Digital): 01


Manager (Digital): 01


Analytics Team


Manager – Data Scientist: 02


Manager – Data Analyst: 02


Manager – Statistician: 02


Manager – Database Administrator: 01


Economist Team


Senior Manager (Economist): 02


Manager (Economist): 02


Research Team


Senior Manager (Industry Research): 02


Manager (Industry Research): 02


API Management Team


Senior Manager (API): 02


Manager (API): 02


Digital Lending & Fin tech Team


Senior Manager (Digital Lending & Fin-tech): 02


Manager (Digital Lending & Fin-tech): 02


கல்வித்தகுதி :


சம்பந்தப்பட்டத் துறைகளில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


இந்திய யூனியன் வங்கியில் மேற்கண்டப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள பட்டதாரிகள், https://www.unionbankofindia.co.in/english/home.aspx# என்ற இணையதளப்பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். முன்னதாக புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், கையொப்பம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இதனையடுத்து ஆன்லைன் விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக பூர்த்தி செய்து வருகின்ற ஜனவரி 7 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம்:


வங்கிப்பணிக்கு விண்ணப்பிக்கும் General/EWS/OBC பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 800ம்,             


SC/ST/PWBD பிரிவைச்சேர்ந்தவர்களுக்கு ரூ.150 விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.


தேர்வு முறை:


தகுதியுடைய விண்ணப்பத்தாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.


இந்த அறிவிப்பானது, மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும்.  எனவே விண்ணப்பதாரர்கள் மெயில் ஏதாவது அறிவிப்பு வந்துள்ளதா? என பார்த்துக்கொள்வது அவசியமான ஒன்று. மேலும்  எந்தத் தேதியில் நேர்காணல் உங்களுக்கு உள்ளதோ? அதில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வங்கி வேலைவாய்ப்புக் குறித்த கூடுதல் விபரங்களை https://www.unionbankofindia.co.in/pdf/Notification%20for%20Recruitment%20of%20Specialist%20Officers,%20Domain%20Experts%20on%20Contractual%20Basis.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.