தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) காலியாக உள்ள மருத்துவ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமுள்ளவர்கள் வருகின்ற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்பது சமூகப்பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இதன் மூலம்  தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ்,  விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்பொழுது நேரிடும் உடல் நலக் குறைபாடு, பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம், ஏற்படும் காலங்களில் பண உதவி வழங்கியும் தொழிலாளர்கள் தாம் செய்யும் வேலையால் ஏற்படும் சுகவீனம், தற்காலிக இயலாமை போன்ற காலங்களில் தொழிலாளர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் உரிய முழு மருத்துவச் சேவையுடன் கூடிய பராமரிப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு, சட்டச்செயல் வடிவம் கொண்டு அமல் செய்யப்பட்டுள்ளது. 


 தொழிலாளர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவியாக உள்ள இந்த இஎஸ்ஐ மருத்துவமனையில் பலர் பணிபுரிந்துவரும் நிலையில், தற்போது காப்பீட்டு மருத்துவ அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்..



இஎஸ்ஐயில் காப்பீட்டு மருத்துவ அலுவலர் பணிக்கான தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் – 1120


கல்வித்தகுதி – விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு - இஎஸ்ஐயில் காப்பீட்டு மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 31.01.2022 க்குள் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில்


எஸ்சி/எஸ்சி பிரிவினைச்சேர்ந்தவர்களுக்கு ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இஎஸ்ஐ மருத்துவமனையில் மருத்துவ அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், https://www.esic.nic.in/recruitments  என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைனில் வருகின்ற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ள வேண்டும்.


தேர்வு முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  200 மதிப்பெண்களுக்கு நடைபெறும் இத்தேர்வானது 2 மணிநேரத்திற்கு நடைபெறும்.


சம்பளம் – மருத்துவ அலுவலர் பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.56,100 – ரூ.1,177, 500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இஎஸ்ஐயில் மருத்துவ அலுவலராகப்பணிபுரிவதற்கு விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும்  இஎஸ்ஐயில் தற்போது வெளியாகியுள்ள வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://www.esic.nic.in/attachments/recruitmentfile/0421d96b22441db072cf4e56b260ebd9.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக அறிந்துகொள்ளலாம்.