இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணைய (The Unique Identification Authority of India (UIDAI)) அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
Assistant Section Officer (ASO)
Assistant Account Officer (AAO)
கல்வித் தகுதி:
- இது Deputation அடிப்படையிலான பணி என்பதால் சம்பந்தப்பட்ட துறையில் மத்திய அரசு பணியில் Pay Matrix Level 5,3,4, என்ற நிலைகளில் மாத ஊதியம் பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நிர்வாகம் சார்ந்த பணிகள் செய்த அனுபவம் இருக்க வேண்டும்.
- Assistant Account Officer பணியிடத்திற்கு Chartered Accountants/Cost Accountants/MBA (Finance) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் .
- இந்தப் பணிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் நல்லது.
- கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Assistant Section Officer - Pay Matrix Level-6 of the 7th Central Pay Commission (Rs. 35,400 - Rs. 1,12,400)
Assistant Account Officer - Pay Matrix Level-8 of the 7th Central Pay Commission (Rs. 47,600 – Rs. 1,51,100)
வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களை கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.05.2024
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
Director (HR),
Unique Identification Authority of India (UIDAI),
Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange,
GD Somani Marg,
Cuffe Parade, Colaba,
Mumbai - 400 005
இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.