மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சாய்னிக் பள்ளியில் (Sainik School) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Quarter Master


திருப்பூரிலுள்ள AMARAVATHI NAGAR பகுதியில் செயல்பட்டு வரும் சாய்நிக் பள்ளியில் உள்ள தேர்ந்தெடுக்கப்படுவர்கள் பணிக்கு நியமிக்கப்படுவர்.


கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பி.ஏ. மற்றும் பி.காம் படித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் ஐந்தாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


Quarter Master’s Course படித்திருப்பவராக இருப்பது நல்லது. 


இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பள்ளி வளாகத்தில் தங்குமிடம் அளிக்கப்படும். அதோடு, சாய்நிக் பள்ளியின் விதிமுறைகள்படி மற்ற Allowances வழங்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. 


ஊதிய விவரம்:


இதற்கு மாத ஊதியமாக ரூ.29,200/- வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை:


https://www.sainikschoolamaravathinagar.edu.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.


விண்ணப்ப கட்டணம்:


இதற்கு விண்ணபிக்க பொதுப் பிரிவினருக்கு ரூ.500/-யும்  பழங்குடியினர் / பட்டியலின பிரிவினர் ஆகியோருக்கு ரூ.300-யும் கட்டணமாக செலுத்த வேண்டும்.


தெரிவு செய்யப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி


Principal,
 Sainik School, Amaravathinagar,
 Pin- 642 102, Udumalpet Taluk, 
Tiruppur 


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30-04.2024


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.sainikschoolamaravathinagar.edu.in/careersQM.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 





மேலும் வாசிக்க..


TN MRB Recruitment: 2,553 பணியிடங்கள்;எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - இன்று முதல் விண்ணப்பிக்கலாம்?


Job Alert: 10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் வேலை - உடனே விண்ணப்பிங்க!