இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணைய (The Unique Identification Authority of India (UIDAI)) அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


பணி விவரம்


Assistant Section Officer (ASO)  


Assistant Account Officer (AAO) 


கல்வித் தகுதி:



  • இது Deputation அடிப்படையிலான பணி என்பதால் சம்பந்தப்பட்ட துறையில் மத்திய அரசு பணியில் Pay Matrix Level 5,3,4, என்ற நிலைகளில் மாத ஊதியம் பெறுபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நிர்வாகம் சார்ந்த பணிகள் செய்த அனுபவம் இருக்க வேண்டும். 

  • Assistant Account Officer பணியிடத்திற்கு Chartered Accountants/Cost Accountants/MBA (Finance) ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் . 

  • இந்தப் பணிகளுக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பின் நல்லது. 

  • கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். 


ஊதிய விவரம்:


Assistant Section Officer -  Pay Matrix Level-6 of the 7th Central Pay Commission (Rs. 35,400 - Rs. 1,12,400)


Assistant Account Officer - Pay Matrix Level-8 of the 7th Central Pay Commission (Rs. 47,600 – Rs. 1,51,100)


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேவையான ஆவணங்களை கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.05.2024


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:


Director (HR), 
Unique Identification Authority of India (UIDAI), 
Regional Office, 7th Floor, MTNL Telephone Exchange, 
GD Somani Marg, 
Cuffe Parade, Colaba, 
Mumbai - 400 005


இது தொடர்பான கூடுதல் விவரங்களை காண https://uidai.gov.in/en/about-uidai/work-with-uidai/current-vacancies.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.




மேலும் வாசிக்க..


VOC Port Trust Recruitment 2024:பொறியியல் பட்டம் பெற்றவரா?ரூ.1 லட்சம் மாத ஊதியம் - முழு விவரம்!


TN MRB Recruitment:2,553 பணியிடங்கள்;எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிங்க!