மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணியின் கூடுதல் விவரங்கள்
இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் உள்ள 14 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க தகுதியுடையவர் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://iwai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
காலி பணியிடங்கள்
Deputy Director (finance and accounts) - 02
EDP Assistant - 01
Junior Hydrographic Surveyor (JHS) - 03
Stenographer -D - 04
Lower Division Clerk (LDC) - 04
கல்வித்தகுதி
இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு கல்வித்தகுதியானது பதவிகளுக்கு ஏற்ப மாறுப்படுகிறது. அதன்படி, 12ம் வகுப்பு தேர்ச்சி, degree, engineering, diplomo in engineering அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Stenographer, Lower Division Clerk போன்ற பணிகளுக்கு தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வருமானம்
இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு வருமானம் ஆனது,
Deputy Director (finance and accounts) - ரூ. 67,700 முதல் 2,08,700
EDP Assistant - ரூ. 35,400 முதல் 1,12,400
Junior Hydrographic Surveyor (JHS) - ரூ. 35,400 முதல் 1,12,400
Stenographer -D - ரூ. 25,500 முதல் 81,100
Lower Division Clerk (LDC) - ரூ. 19,900 முதல் 63,200 வரை இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது விவரம்
இந்த மேற்கண்ட பணிகளுக்கு வயதானது 40 வயரை இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://iwai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
தேர்வு செய்யும் முறை
இந்த மேற்கண்ட பணியிடங்களுக்கு கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் | IWAI Recruitment 2022 | https://cdn.digialm.com//EForms/configuredHtml/1258/80176/Instruction.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் apply here என்பதை கிளிக் செய்யவும்.
- முதல் முறை விண்ணப்பம் செய்வோர் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்த பின் பயனாளர் ஐடி உருவாக்கப்படும்
- ஐடி உருவாகியதையடுத்து, லாக் இன் செய்து அப்ளை செய்யவும்.
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
- மேலும் விவரங்களுக்கு https://iwai.nic.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
விண்ணப்பிக்க கட்டணம்
General (UR)/OBC பிரிவினருக்கு ரூ.500 மற்றும் SC/ST, PWD, EWS பிரிவினருக்கு ரூ.200 செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.