சென்னையில் செயல்பட்டுவரக்கூடிய  வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் இருந்து மெஷின் ஆபரேட்டர், டிரைவர் மற்றும் செவிலியர் பணிக்கான காலிப்பணியிட அறவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.


 குடும்பச் சூழல் மற்றும் பொருளாதாரத் தேவைகளைக்கருத்தில் கொண்டு பலர் வெளிநாடுகளுக்கு வேலை செய்ய முடிவெடுக்கின்றனர். ஆனால் அவர்களுக்கானச் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் பலர் அதிகளவு பணம் கட்டி ஏமாற்றக்கூடிய நிலையெல்லாம் உருவானது. இதுப்போன்ற இனி நடைபெறக்கூடாத என்ற நோக்கில், கடந்த 1978-ஆம் ஆண்டு முதல் தமிழக அரசின் சார்பில் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் மூலம் பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்குப் பணிகளுக்கு செல்வதற்காக இந்நிறுவனத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது புதிய வேலைவாய்ப்பு ஒன்றினை அறிவித்துள்ளது. அதில் மெஷின் ஆபரேட்டர், டிரைவர் மற்றும் செவிலியர் பணிக்கு சேர விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான தகுதிகள் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.


 


தற்போது அயல்நாட்டு நிறுவனத்தின் மூலம் 20 மெஷின் ஆபரேட்டர், 50 செவிலியர்கள், 30 டிரைவர்கள், சமையல் வல்லுநர்கள் 30 பேர் என மொத்தம் 140 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.


 வயது வரம்பு : விண்ணப்பத்தார்கள் 22 வயது முதல் 43 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


 கல்வித்தகுதி :  மேற்கண்ட பணிகளுக்கு தகுந்தவாறு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக  அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஐடிஐ, செவிலியர் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும். 10 வது தேர்ச்சிப்பெற்றவர்களும் விண்ணப்பிக்க முடியும்.


 விண்ணப்பிக்கும் முறை


மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே இன்றைக்குள் (செப்டம்பர் 30) விண்ணப்பிக்க வேண்டும்.


முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.omcmanpower.com என்ற பக்கத்திற்கு செல்லவும்.


அதில் உள்ள விண்ணப்பத்தை கிளிக் செய்துக்கொள்ள வேண்டும். மேலும் அதில் கேட்கப்பட்டுள்ள முகவரிச்சான்றிதழ், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், சமீபத்தில் எடுத்த புகைப்படம், பணி முன்பவம் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்துவைத்துக்கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும். அதிகாரிகள் தொடர்புக்கொண்டு தகவல்களை தருவதற்கு வசதியாக எப்போதும் பயன்படுத்தக்கூடிய மொபைல் எண், மெயில் ஐடி போன்றவற்றை சரியாகக்குறிப்பிட்டிருக்க வேண்டும்.


விண்ணப்பத்தில் எந்த தவறும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பின்னதாக விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.


 தேர்வு முறை:


மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு நேர்காணல் மூலம் இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.



சம்பள விபரம்:


நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு அவர்களின் பதவியின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் மெஷின் ஆபரேட்டர் – ரூபாய் 29100/-


செவிலியர் – ரூபாய் 80 ஆயிரம் முதல் 1 லட்சத்து 20 ஆயிரம்


டிரைவர் – ரூபாய் 27 ஆயிரம் முதல் ரூபாயு் 34 அயிரத்து 500


சமையல் வல்லுநர் – ரூபாய்36 ஆயிரம் முதல் ரூபாய் 37 ஆயிரம்


மேலும் இதுக்குறித்த கூடுதல் விபரங்களை https://www.omcmanpower.com/ என்ற இணையப்பக்த்தின் மூலம் அறிந்துகொள்ளலாம்..