வரும் அக்டோபர் 1ம் தேதி முதல், 60 வயது கடந்த வேலை தேடு முதியவர்களுக்கு ஆன்லைன் வேலைவாய்ப்பு இயங்குதளத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. 

  


Senior Able Citizens for Re-Employment in Dignity (Sacred) என்ற இந்த இணையத்தளத்தில் வேலை தேடுதல், வேலை பொருத்துதல், வாழ்க்கைத் தொழில் ஆலோசனை பயிற்சி பெறுதல் உள்ளிட்ட வேலைவாய்ப்பு சார்ந்த பல்வேறு சேவைகளை வழங்கும்


வேலை தேடுவோர், வேலை கொடுப்போர் இடையிலான இடைவெளியைக் குறைக்க ஆன்லைன் வேலைவாய்ப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. பணியிடத்திலிருந்து பணியாளர்களைத்  தேர்வு செய்வது வரை அனைத்தும் இந்தத் தளத்தில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  




இந்த இணையதளத்தில் முதியவர்களுக்கு வேலைவாய்ப்பினை அதிகரிக்க முன்வருமாறு FICCI, Assocham, CII  போன்ற தொழில் வர்த்தக சங்கத்தினருக்கு மத்திய சமூக நீதி செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். 


முதியவர்கள் பாதுகாப்பு: 2050ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 20 சதவீதம் பேர் அதாவது 300 மில்லியனுக்கும் மேற்பட்டோர் (அதாவது, நாம் சந்திக்கும் 5ல் ஒருவர் ) மூத்த குடிமக்களாக இருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளுக்கான தேவை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 


முன்னதாக, முதியோர்களுக்கான சேவைகளை அளிக்கும் சேஜ் (முதியோர் பராமரிப்பு வளர்ச்சி இயந்திரம் -SAGE)இணையதளத்தை  மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை  அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் நான்காம் தேதியன்று தொடங்கிவைத்தார். இந்த சேஜ் இணையதளத்தில் முதியோர் பராமரிப்புக்கான அனைத்து பொருட்களையும் வாங்க முடியும், மற்றும் தொடக்க நிறுவனங்கள் (STARTUP COMPANY) அளிக்கும் நம்பகமான சேவைகளையும் பெற முடியும்.  




மேலும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளையும், சவால்களையும் நிவர்த்தி செய்வதற்கு நாடு முழுவதுமான இலவச உதவி மைய எண் - 14567ஐ வெளியிடப்பட்டது. இது முதியோர் உதவி எண் என அழைக்கப்படுகிறது. 


ஓய்வூதிய விஷயங்கள், சட்ட விஷயங்கள், உணர்வுப்பூர்வமான ஆதரவு போன்ற தகவல்களும், வழிகாட்டுதல்களும் இந்த உதவி எண் மூலம் இலவசமாக வழங்கப்படுகின்றன.  துஷ்பிரயோக பிரச்சினைகள் இருந்தாலும்,  இந்த உதவி மையம் தலையிடுகிறது. வீடுகள் இன்றி தவிக்கும் முதியோரையும் இந்த உதவி மையம் மீட்கிறது என்று அரசு தெரிவித்துள்ளது. 


மேலும், வாசிக்க: 


1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்க உத்தரவு: நவம்பர் 1 முதல் நடைமுறை என அரசு அறிவிப்பு!


சாகும் போதும் இணை பிரியாத தம்பதி... பெரம்பலூர் அருகே சோகம்!