இந்து சமய அறநிலையத்துறையில் நகைகள் மற்றும் விலையுயர்ந்தவற்றை மதிப்பிடவும், சரிபார்க்கவும் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் நபர்கள் நவம்பர் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,218 கோயில்கள் இயங்கி வருகின்றனர். இவை அனைத்தையும் நிர்வகிக்க, கூடுதல் ஆணையர் (விசாரணை), கூடுதல் ஆணையர் (திருப்பணி), இணை ஆணையர் (தலைமையிடம்), இணை ஆணையர் (சட்டச்சேர்மம்), இணை ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்), இணை ஆணையர்(சரிபார்ப்பு-தலைமையிடம்), உதவி ஆணையர் (சட்டச்சேர்மம்), உதவி ஆணையர் (கிராமக்கோயில் பூசாரிகள் நலவாரியம்) உள்ளிட்ட பிரிவுகளின் கீ்ழ் பலர் பணியாற்றி வருகின்றனர். மேலும் கோவிலில் உள்ள விலையுயர்ந்த பொருள்கள் மற்றும் நகைகளை மதிப்பீடு செய்வதற்காக செயல்பட்டுவரும் நகை மதிப்பீட்டு குழுவில் இளநிலை உதவியாளர்களுக்கான 20 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.
இந்து சமய அறநிலையத்துறையில் இளநிலை உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் : 20
கல்வித்தகுதி : இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.
இதர தகுதிகள் : தங்கள் மற்றும் வெள்ளி நகைகள், வெள்ளி, தாமிரம் போன்ற உலோக தகடுகள் மீது தங்க முலாம் பூசுதல் மற்றும் இதர மதிப்புடைய பொருள்களைப்பற்றி நுட்பமான தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பொற்கொல்லர் தொழிலில் 5 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இரத்தினம், தங்கள், வெள்ளி போன்ற விலையுயர்ந்தப் பொருள்களை மதிப்பீடு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் https://hrce.tn.gov.in/resources/docs/hrcescroll_doc/87/document_1.pdf என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தை பிரிண்ட எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கேட்கப்பட்டுள்ள அனைத்துrச் சான்றிதழ்களையும் இணைத்து இப்பணிக்கான விண்ணப்பத்தை வருகின்ற நவம்பர் 17ஆம் தேதிக்குள் அதாவது நாளைக்குள் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
அனுப்ப வேண்டிய முகவரி:
ஆணையர்,
இந்து சமய அறநிலையத்துறை,
119 உத்தமர் காந்தி சாலை,
சென்னை – 600034.
தேர்வு முறை:
மேற்கண்ட முறைகளில் இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத்தேர்வு, செய்முறை மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ.35,400 – 1,12,400 என நிர்ணயம்.
எனவே இப்பணிக்கான அனைத்துத்தகுதிகளையும் பெற்ற இளைஞர்கள் உடனடியாக இப்பணிகளுக்கு விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள்.