எல்லைப்பாதுகாப்பு படையில் Constable மற்றும் Head Constable  பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் வருகின்ற டிசம்பர் 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


இளைஞர்கள் பலரிடம் ராணுவத்தில் ஏதாவது ஒரு பிரிவில் சேர்ந்துப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அதிகளவில் இருக்கும். இந்நிலையில் தான் அவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக எல்லைப்பாதுகாப்புப் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப்பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப்பாதுகாப்புப் படை இயங்கிவருகிறது. இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது. எனவே இந்நேரத்தில் எல்லைப்பதுகாப்புப் படையில் விண்ணப்பிப்பதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு என்ன என்பது குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.



எல்லைப்பாதுகாப்புப் படையில் Constable, Head Constable பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் : 72


கல்வித்தகுதி : மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஐ.டி.ஐ மற்றும் டிப்ளமோ தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும்.  அல்லது அதற்கு சமமான படிப்பிற்கு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு – 18 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள்  இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் http://rectt.bsf.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 


எல்லைப்பாதுகாப்புப் படை பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அறிவிப்பினை முழுமையாக படித்துக்கொள்ளவும்


இறுதியாக விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள சுய விபரம், கல்வித்தகுதி, மற்றும் தேவையான ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விண்ணப்படிவத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்ப வேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


குறிப்பாக இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை வருகின்ற டிசம்பர் 25-ஆம் தேதிக்குள் ஆன்லைன் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.


விண்ணப்பக்கட்டணம் – விண்ணப்பக்கட்டணம் எதுவும் கிடையாது.


தேர்வு முறை:


இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்களுக்கு ஆவணங்களைச் சரிபார்த்தல் , மருத்துவத்தேர்வு , உடற்தகுதித் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என வேலைவாய்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பளம் – பணிக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப்படும்.


மேலும் இந்தவேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை http://rectt.bsf.gov.in/ என்ற இணையதள பக்கத்தின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். எனவே மத்திய அரசு பணி அதிலும் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் உடனடியாக இப்பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.