தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்லேறு துறைகளில் காலியாக உள்ள 626 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் மே 3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் சேவைத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 626 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை?குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.



  •  


Automobile Engineer


மொத்த பணியிடங்கள் - 4


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Automobile (or) Mechanical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும். இதோடு 5 ஆண்டு பணி முன்அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.


சம்பளம் : மாதந்தோறும் ரூ.56,100 – 2,05,700 என நிர்ணயம்.


Junior Electrical Inspector


காலிப்பணியிடங்கள் - 8


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Electrical Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.37,700 – 1,38,500


Assistant Engineer (Agricultural Engineering) பணிக்கானத் தகுதிகள்:


காலிப்பணியிடங்கள் - 66


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E.(Industrial Engineering) (or) B.E (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering) படிப்பு முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.37,700 – 1,38,500


Assistant Engineer (Highways Department)


காலியிடங்களின் எண்ணிக்கை: 33


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Civil Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : மாதந்தோறும் ரூ.37,700 – 1,38,500


Assistant Director of Industrial Safety and Health பணிக்கானத் தகுதிகள்:


மொத்த பணியிடங்கள் -18


கல்வித் தகுதி:


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Mechanical Engineering or Production Engineering or Industrial Engineering or Electrical Engineering or Chemical Engineering or Textile Technology படிப்பு முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : மாதந்தோறும் ரூ.37,700 – 1,38,500


Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD)


மொத்தப்பணியிடங்கள் - 309


கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering படிப்பு முடித்திருக்க வேண்டும்.


சம்பளம் : ரூ.37,700 – 1,38,500


இதேப்போன்று General Foreman, Technical Assistant, Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department), Assistant Engineer (Tamil Nadu Urban Habitat Development Board),Assistant Engineer (Chennai Metropolitan Development Authority) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


வயது வரம்பு:


மேற்கண்ட அனைத்துப்பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆனால் ஆட்டோமொபைல் இன் ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்  37 வயதிற்குள் இருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேப்போன்று SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு எதுவும் கிடையாது.


 விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், https://www.tnpsc.gov.in/ அல்லது https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே டிஎன்பிஎஸ்சியில் நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலமே விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி – மே 3, 2022


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் – ஜூன் 26, 2022


டிஎன்பிஎஸ்சி நடத்தும் எழுத்துத்தேர்வில் தேர்ச்சிப் பெறுபவர்கள் மட்டுமே நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





விண்ணப்பக் கட்டணம் :


இதற்கான விண்ணப்பக்கட்டணம் ரூ. 150, ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வுக் கட்டணம் :


தேர்வுக்கட்டணம் ரூ. 200. இருந்தப்போதும்  SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.tnpsc.gov.in/Document/english/2022_10_CESE%20_eng.pdf என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.