தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலமாக மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.


அரசு வேலையில் சேர்ந்துப் பணியாற்ற வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். தேர்வு எழுதி பணியில் சேர்வது ஒருபுறம் இருந்தாலும், தற்காலிக அடிப்படையில் பணியில் சேர்ந்து தங்களது பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என பலர் நினைப்பது உண்டு. இவர்களின் கனவை நினைவாக்கும் விதமாக தற்போது தேனி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தின் மூலமாக மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவில் காலியாக உள்ள இளநிலை மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.





இளநிலை உதவியாளர் பணிக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி :


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வயது வரம்பு:


இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பள விபரம்:


மாதந்தோறும் ரூபாய் 13 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கானத் தகுதிகள்:


கல்வித்தகுதி:


விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்றிருந்தால் போதும்.


வயது வரம்பு:


விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்:


இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 9 ஆயிரம் என நிர்ணயம்.


விண்ணப்பிக்கும் முறை:


மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலமாக  விண்ணப்பிக்க வேண்டும்.


https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/03/2022033135.pdf அல்லது https://theni.nic.in/notice_category/recruitment/  என்ற இணையதளப்பக்கத்தில் உள்ள விண்ணப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்துக்கொள்ள வேண்டும்.


பின்னர் அதில் கேட்கப்பட்டுள்ள பெயர், கல்வித்தகுதிக்கான சான்றிதழ், வயது வரம்பிற்கான சான்றிதழ், தட்டச்சு முடித்திருந்தால் அதற்கான சான்றிதழ் போன்றவற்றை தவறில்லாமல் பூர்த்தி செய்து தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.


விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:


தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,


மாவட்ட ஆட்சித்தலைவர்,
முதல் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தேனி – 625 531.


தேர்வு செய்யும் முறை:


மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு சிறப்புத் தேர்வு நடைபெறும் எனவும், இதில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.


பொது அறிவு, பேரிடர் மேலாண்மை, கணினி பயன்பாடு, பொதுநிர்வாகம்  போன்ற பிரிவுகளில் கேள்விகள் இடம் பெற்றிருக்கும்.


இத்தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். 


எனவே அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெற்றுக்கொள்ளுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://theni.nic.in/notice_category/recruitment/  அல்லது https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2022/03/2022033135.pdf  என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.