தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி ( Tamil Nadu Employment and Training Subordinate Services) சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே (16.11.2023) கடைசி.


பணி விவரம்


விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் (Hostel Superintendent cum Physical Training Officer)


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து உடற்கல்வி துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதே துறையில் Physical Education (Higher Grade) படித்திருக்க வேண்டும். ஆசிரியர் பணியில் குறைந்தது ஆறு மாதம் கால பணி அனுபவம் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம் 


செயல் அலுவலர் நிலை I - ரூ.35,400 - ரூ.1,30,400/-


தெரிவு செய்யும் முறை


இதற்கு எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


தேர்வு மையம்


இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.


எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்




ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:


விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தர பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.


விண்ணப்பக் கட்டணம்: 


நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150/-


எழுத்துத் தேர்வு கட்டண்ம் - ரூ.150/-


எப்படி விண்ணப்பிப்பது?


www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


முக்கியமான நாட்கள்:




விண்ணப்பிக்க கடைசி தேதி - 16.11.2023 இரவு 11.59 மணி வரை 


முதல் இரண்டு தாள் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் - 21.01.2023


இந்த வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தையும் காண https://www.tnpsc.gov.in/Document/english/24_2023_HS_ENG_.pdf - என்ற இணைப்பை காணவும்.


BHEL Recruitment 2023 


பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் ' Supervisor Trainee'  பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 


பணி விவரங்கள்--மேலும் வாசிக்க.


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து வகையான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவு தரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Cenre)  உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 


திருவள்ளூர் மாவாட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாசிக்க..