BHEL Recruitment 2023 : பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பிஹெச்இஎல்) நிறுவனத்தில் ' Supervisor Trainee' பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரங்கள்:
Supervisor Trainee (Mechanical)
Supervisor Trainee (Civil)
Supervisor Trainee (HR)
பணி இடம்:
இந்த வேலைவாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுபவர்கள் திருச்சி, போபால், ஐதராபாத், ஹரித்வார், ஜான்சி, கார்ப்ரேட் ஆபிஸ், பவர் செக்டார் உள்ள அலுவலகத்தில் பணியமர்த்தப்படுவர்.
ஊதிய விவரம்:
இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ரூ.32,000 - 1,00,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
65% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பணி காலம்:
இது இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையிலான பணி.
விண்ணப்ப கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து ரூ.795 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கபட்டுள்ளது. ஆனால், ப்ராசசிங் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 25.11.2023
உத்தேசிக்கப்பட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு தேதி - டிசம்பர்,2023
அதிகாரப்பூர்வ இணையத முகவரி-https://www.apprenticeshipindia.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர்கள் BHEL இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://careers.bhel.in:8443/bhel/jsp/#openings- கிளிக் செய்யவும்,
ஹோம் பக்கத்தில் உள்ள மெனு பிரிவுகளில் "careers" என்பதை கிளிக் செய்யவும்.
அடுத்து“BHEL Recruitment 2023” என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உங்களது விவரங்களை பூர்த்தி செய்து உடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றி submit button- ஐகிளிக் செய்யவும்.
https://careers.bhel.in/st_2023/static/ST_Detailed%20Advertisement.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து முழு விவரத்தை அறியலாம்.