டாக்டர் கலைஞர்  நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம்,  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக  நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.


மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்


டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 18.11.2023 சனிக்கிழமை அன்று செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அச்சரபாக்கம் என்ற இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திட உள்ளது.


நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு 


இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கான மனிதவள தேவைக்குரிய நபர்களை நேர்முகத் தேர்வினை நடத்தி தேர்வு செய்ய உள்ளார்கள்.  இவ்வேலைவாய்ப்பு முகாமில் எட்டாம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, பட்டப்படிப்பு பி.இ, ஐடிஐ மற்றும் டிப்ளமோ படித்த வேலை நாடுநர்கள், பார்மசி / பாரா மெடிக்கல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள அனுமதி முற்றிலும் இலவசம்.


வயது வரம்பு 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் 18.11.2023 அன்று காலை 08.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை அச்சரப்பாக்கம், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேரில் வருகைபுரிந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஆ.ர.ராகுல் நாத், இ.ஆ.ப அவர்கள் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.  


மேலும், இம்முகாமில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் https://tnprivatejobs.tn.gov.in இணையதளம் மற்றும் https://forms.gle/xk5JHkaH81s2J5T6A என்ற கூகுல் லிங்கில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் பணிநியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.   


 




Job Alert: தமிழ் எழுத, படிக்க தெரியுமா? அரசுப்பணி- விண்ணப்பிப்பது எப்படி?



தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.  ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:


அலுவலக உதவியாளர்


இரவுக் காவலர்



கல்வித் தகுதி:


இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.


 இரவுக் காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 


வயது வரம்பு:


இதர பிரிவிவர் 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:


அலுவலக உதவியாளர் - ரூ.15,700 - ரூ.50,000/-


இரவுக் காவலர் - ரூ.15,700 - ரூ.50,000/-



அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:


மாவட்ட ஆட்சியாளரின் நேர்முக உதவியாலர் (வளர்ச்சி)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம்,
தருமபுரி = 636 705


எப்படி விண்ணப்பிப்பது?


தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://www.dharmaburi.tn.nic.in/- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி:  21.11.2023 மாலை 05.45 வரை