நில அளவைப் பதிவேடுகள் சாரிநிலைப் பணியிடங்களுக்கு  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதில் நில அளவர் மற்றும் வரைவாளர் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர்/ உதவி வரைவாளார் ஆகிய பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பிக்க வரும் 27 ஆம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

பணி இடங்கள்: 1089

கல்வித் தகுதி:

 சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ/ பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் அல்லது சம்மந்தப்பட்ட தொழிற் துறைகளில் (Surveyor, Draftsman) தேசிய தொழிற் பயிற்சி கவுன்சில் வழங்கும் சான்றிதழ்  பெற்றவர்கள்  இதற்கு  விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

நில அளவர்/வரைவாளர்  பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள்  32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 

தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப்  பணியின் கீழுள்ள  அளவர்/ உதவி வரைவாளர்  பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணம்:

தேர்வு கட்டணம் ரூ. 100;

பதிவுக் கட்டணம் : ரூ.150

எழுத்துத் தேர்வு:

  எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி தகுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். கணினி தேர்வு  வரும்  நவம்பர், 6 ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.

 

விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in www.tnpscexams.in என்ற இணையதளத்தில் முழு விவரங்களை தெரிவித்து கொள்ளலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.08.2022

அறிவிப்பு குறித்த கூடுதல் விவரங்களுக்கு.. https://apply.tnpscexams.in/apply-now?app_id=UElZMDAwMDAwMQ==என்ற லிங்கை கிளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண