TNPSC group 2A Last Date: குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், இன்று வரை அதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக TNPSC தெரிவித்துள்ளது. ஆகையால், விண்ணப்பிக்க தவறியவர்கள், உடனடியாக விண்ணப்பிக்கவும்.
குரூப் 2 தேர்வு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியது. அதன்படி, தேர்வாளர்கள் ஜுலை 19ம் தேதியான நேற்று வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
குரூப் 2 தேர்வு மூலம் தமிழ்நாடு அரசில் உள்ள 2030 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, குரூப் 2 பிரிவில் 507 இடங்களும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களும் உள்ளன. தமிழ்நாடு தொழிலாளர் சேவை துறையில் உள்ள உதவி ஆய்வாளர் தொடங்கி, கீழ் நிலை கிளெர்க் வரை மொத்தம் 48 பிரிவுகளில் உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வுகளை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனை தொடர்ந்து பிரிலிம்ஸ் மற்றும் மெயின்ஸ் தேர்வுகளுக்கு முறையே ரூ.150, ரூ.100 மற்றும் ரூ.150 செலுத்த வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் கட்டண தொகையை காலக்கெடுவிற்குள் செலுத்த வேண்டும்.
கால அவகாசம் நீட்டிப்பு:
இந்நிலையில், குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று கடைசி நாளாக இருந்த நிலையில், இன்று இரவு 11.59 மணி விண்ணப்பிக்கலாம் என கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.
தேர்வுக்கான தகுதி:
குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வு 2024க்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, தேர்வாளர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அவரது வயது 18, 20, 22 அல்லது 26 வயதுக்குக் குறைவாகவோ அல்லது 30 அல்லது 40 வயதுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும்.