Group 1 Rank List 2024: உதவி ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி வெளியான நிலையில், தரவரிசை பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது.
டி.என்.பி.எஸ்.சி:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் ஆணையம் சார்பில் அரசின் பல்வேறு காலி இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குரூப் 1, 2, 3, 4 எனப் பல்வேறு வகையான தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
அதன்படி துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 93 பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலைத் தேர்வு கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 முதல் 13ஆம் தேதி வரை முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
முடிவுகள்:
இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று (மார்ச் 28) வெளியாகியது. தேர்ச்சி பெற்றவர்களுக்கான வாய்மொழித் தேர்வு மார்ச் 26 முதல் 28ஆம் தேதி வரை, டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் மார்ச் 28 ஆம் தேதி வெளியாகியது.
இந்நிலையில் குரூப் 1 தேர்வுக்கான தரவரிசை பட்டியலும் இன்று வெளியானது. முதல் மதிப்பென் 587. 25 என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை பெண் எடுத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பட்டியலை தெரிந்து கொள்ள Rank List லிங்க்கை கிளிக் செய்யவும்