தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பினை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தத் தேர்விற்கு வரும் செப்டம்பர் 6 தேதி வரை விண்ணப்பிக்கலாம். 01.04.2022 தேதியின்படி 18 வயது நிறைவடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாமலும் இருப்பது அவசியம்.

பணி விவரம்: வனத்தொழில் பழகுநர்(Forest Apprentice)

காலியிடங்கள்: 10

ஊதியம்:

மாதம் ரூ.37,700 முதல் ரூ.1,38,500 வரை வழங்கப்படும்.

 

கல்வித் தகுதி:

வனவியலில் துறையில் இளங்கலை பட்டம் அல்லது விவசாயம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை அறிவியல், தாவரவியல், வேதியியல், கணினி பயன்பாடுகள், கணினி அறிவியல், பொறியியல் (அனைத்து பொறியியல் பாடங்களும் வேளாண் பொறியியல் உட்பட), சுற்றுச்சூழல் அறிவியல், புவியியல், தோட்டக்கலை, கடல் உயிரியல், கணிதம்,இயற்பியல், புள்ளிவிவரங்கள், வனவிலங்கு உயிரியல், விலங்கியல் பிரிவில் உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பது அவசியம்

தேர்வு செய்யப்படும் முறை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள், உடற்தகுதி தேர்வு மற்றும் வாய் மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில்  தேர்வு செய்யப்படுவார்கள். 

மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சாவூர்,சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம், காஞ்சிபுரம், நாகர்கோவில்,  உதகமண்டலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள தேர்வு மையங்களில் இதற்கான தேர்வை எழுதலாம்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி:

இந்த பணிக்கான தகுதித் தேர்வு 03.12.2022 முதல் 13.12.2022 வரை நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம்:

இந்தத் தேர்விற்கு பதிவுக் கட்டணமாக ரூ.150, மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.100. செலுத்த வேண்டும். 

கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ஆகியோடுக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

www.tnpsc.gov.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.09.2022

கூடுதல் விவரங்களுக்கு... https://www.tnpsc.gov.in/Document/tamil/20_2022_Group_VI_Forest%20App_Notfn_Tamil.pdf