குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் (National Institute Of Fashion Technology) காலியாக உள்ள குரூப்-சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது இந்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.


Lab Assistant, Accounts,Assistant(Admin) , Steno Grade II,Machine Mechanic  உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்ப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க 27 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்வி தகுதி:


NIFT வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அக்கவுண்ட்ஸ் பணிக்கு, வணிகவியல் பிரிவில் இளநிலைப் பட்டத்துடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


இளநிலையில் தேர்ச்சி பெற்று நிர்வாகவியல் பிரிவில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


ஸ்டேனோ பணிக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருப்பது அவசியம்.


இளநிலைப் பட்டத்துடன் சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதவும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் இரண்டு ஆண்டு அனுபவம் உள்ளவாக இருக்க வேண்டும்.


செவிலியர் படிப்புகளில் பட்டம்  பெற்றவர்கள், பிளஸ் 2 தேர்ச்சி உடன், ஆங்கிலத்தில் நிமித்திற்கு 30 வார்த்தைகள், இந்தியில் 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.


நூலக படிப்புகளில் தேர்ச்சி பெற்ற்வர்கள்,  டர்னர், பிட்டர், மெஷினிஸ்ட், ப்ரோடக்சன் டெக்னீசியன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள், கைத்தறி மற்றும் ஜவுளி தொழில்நுட்பம் ஜவுளி வடிவமைப்பு துறையில் டிப்ளமோ, தகவல் தொழில்நுட்பம் டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தேர்வு முறை:


இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறிவுத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்ப கட்டணமாக ரூ.295 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. National Institute of Fashion Technology, Gandhinagar என்ற பெயரில் டி.டி.யாக (டிமாண்ட் டிராப்ட்) எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.


குறிப்பு: விண்ணப்பதாரர் தங்களது பெயர், முகவரி மற்றும் விண்ணப்பிக்கும் பணியின் பெயரை டி.டி.யின் பின்புறம் குறிப்பிடவும்.


எப்படி விண்ணப்பிக்கலாம்?


https://www.nift.ac.in/gandhinagar/careers  என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதனை பூர்த்தி செய்து அதனுடன், கையெடுத்தை attestation செய்து  தேவையான சான்றிதழ்களின் நகல்கள், பயோ-டேட்டா மற்றும் டி.டி.யை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:


The Director,


National Institute of Fashion Technology,


NIFT Campus, Gh-O Road,


Gandhinagar - 262 007


விண்ணபிக்க கடைசி நாள்: 13.08.2022


என்னென்ன பணியிடங்கள், அதற்கான கல்வி தகுதி, ஊதியம் உள்ளிட்டவைகள் குறித்து முழு விவரம் அறிய https://www.nift.ac.in/gandhinagar/sites/gandhinagar/files/inline-files/Recruitment%20of%20Group-%20C-%20Post_0.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.