தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Tamil Nadu Newsprint and Papers Limited) இருக்கும் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிறந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு காத்திருக்கிறது. வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
டி.என்.பி.எல். (தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட்) நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் நிர்வாக செயலாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
General Manager, Deputy General Manager (Information Technology), Deputy General Manager (Finance), Company Secretary உள்ளிட்ட பொறுப்புகளுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர்.
கல்வித் தகுதி:
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம், எம்.சி.ஏ., எம்.எஸ்சி., சி.ஏ, சி.எம்.ஏ. ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் தேவையான கல்வி, முன் அனுபவ சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் செய்ய வேண்டும்.
எவ்வளவு ஊதியம்:
இந்த மூன்று பணிக்கு ஏற்றவாறு அதற்கேற்ப ஆண்டுக்கு இரண்டு இலட்சம் வரை ஊதியமாக வழங்கப்பட உள்ளது.
அஞ்சல் முகவரி:
EXECUTIVE DIRECTOR (OPERATIONS),
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED,
NO.67, MOUNT ROAD,
GUINDY, CHENNAI–600 032,
TAMIL NADU
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2022
ஊதியம், வயதுவரம்பு உள்ளிட்டவைகள் பற்றி கூடுதல் விவரம் அறிய https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/08/TNPL_AdvtNorms_03-08-2022.pdf
என்ற லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
ஆல் தி பெஸ்ட்!
மேலும் படிக்க : Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. தல தோனி பங்கேற்கவில்லையா? என்னென்ன சிறப்பம்சங்கள் ?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்