தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நீதித்துறையில் சிவில் நீதிபதி பதவிக்கான தேர்வை அறிவித்துள்ளது. இதற்கு சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழி காட்டும் மையத்தில் கட்டணமில்லா நேரடி (Offine) பயிற்சிவகுப்புகள் நடத்தப்படுகிறது.


பணி விவரம்:


சிவில் நீதிபதி


மொத்த பணியிடங்கள் - 245 





இக்காவிப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி - Degree in Law For Practising Advocates/Pleaders and Assistant Public Prosecutors. இவர்கள் 45 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


வயது வரம்பு:


பொதுப்பிரிவினருக்கு (OC) உச்ச வயது வரம்பு – 37, 


இதர வகுப்பினருக்கு (SC/SCA/ST/BC/BCM/MIBC/DW) – 42


For Fresh Law Candidates - அனைத்து பிரிவினருக்கும் உச்ச வயது வரம்பு - 29


மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உச்ச வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.


தேர்வு மையங்கள் : 


சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, மதுரை, சேலம், வேலூர், தஞ்சாவூர், விழுப்புரம் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். 


எப்படி விண்ணப்பிப்பது?


https://www.tnpsc.gov.in/ http://www.tnpsc.gov.in/  - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:


விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.


ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்


தேர்வுக் கட்டண சலுகை: 


விண்ணப்பப்பதிவுக் கட்டணம் 150 ரூபாய், தேர்வுக்கட்டணம் 200 ரூபாய் ஆகும். முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், SC/ST பிரிவினர்களுக்குக் கட்டணம் இல்லை.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2023


தேர்வு நாள் முதல் நிலை தேர்வு - 19.08.2023


 முதன்மைத் தேர்வு 28.10.2023 - 29. 10.2023





பயிற்சி வகுப்புகள்:


தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்ணையத்தாய் (TPSC) நடத்தப்படும் Civil Judge தேர்வின் 245 காலியிடங்களுக்கான அறிவிப்பு 01.06.2023 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும் விண்ணப்பிக்க http://ww.resc.gov.in என்ற இணையதன் முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.


(TNPSC) நடத்தப்படும் Cvil Judge தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ள Google Form -  http://bit.ly/candidatesregistrationform3MZZvn3 - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


இந்த பயிற்சி  வகுப்புகள் தொடர்பான விவரங்கள் அறிய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் - 9499966021 / 044-22501032 


மின்னஞ்சல் முகவரி – – peeochn@gmail.com