தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 30-ம் தேதி கடைசியாகும்.


நிதித்துறை, தொடர்பியல், மனித வளம், சட்டம், ஐ.டி., சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை காணலாம்.


பணி விவரம்:



  • சீனியர் கன்சல்டண்ட்

  •  கன்சல்டண்ட்

  • அசோசியேட் கன்சல்டண்ட்


வயது வரம்பு:



  • சீனியர் கன்சல்டண்ட் - 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  •  கன்சல்டண்ட் - இதற்கு விண்ணப்பிக்க 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

  • அசோசியேட் கன்சல்டண்ட் - 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


கல்வி மற்றும் பிற தகுதிகள்


இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும். 


பணி காலம்:


இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர்.


ஊதிய விவரம்:


அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


எப்படி தேர்வு செய்யப்படுவர்:


இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,


விண்ணப்பிப்பது எப்படி?


இதற்கு  ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 


கவனிக்க..


இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை காணவும்.


முகவரி:


The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.


இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Advt%20for%20Consultant%20%20Young%20Professionals.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.