தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் சார்நிலைப் பணியில் (Combined Research Assistant in Various Subordinate Services.) அடங்கிய பதவிக்கான காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இம்மாதம் 25-ஆம் தேதி கடைசியாகும்.
பணி விவரம்:
ஆராய்ச்சி உதவியாளர் (Research Assistant)
புள்ளியியல், பொருளாதாரம்,புவியியல்,சமூகவியல், Evaluation and AppliedResearch Department ஆகிய துறைகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மொத்த பணியிடங்கள் : 06
இந்தப் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள் மற்றும் நேர்முகத் தேர்வு பதவி என இரண்டு பிரிவுகளாக பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
கல்வித் தகுதிகள்:
- அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கணிதம் அல்லது புள்ளியியல் (Statistics Or
Mathematics) துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். - பொருளாதாரம், புவியியல், சோசியாலஜி, சோசியல் ஒர்க், பொருளாதாரம், Econometrics, Anthropology, Agricultural, Economics, Public Administration ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம் படித்திருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும், பள்ளி, கல்லூரி படிப்புகளில் தமிழ், ஆங்கிலம் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் உள்ளிட்ட பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர்க்கு அதிகபட்ச வயதுவரம்பு 32 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகள்
- ஆராய்ச்சி உதவியாளர் - புள்ளியியல் - ரூ.3,62,000 - ரூ.1,33,100
- ஆராய்ச்சி உதவியாளர் - பொருளாதாரம்- .3,62,000 - ரூ.1,33,100
- ஆராய்ச்சி உதவியாளர் - புவியயல்- .3,62,000 - ரூ.1,33,100
- ஆராய்ச்சி உதவியாளர் - சமூகவியல் - .3,62,000 - ரூ.1,33,100
நேர்முகத் தேர்வு பதவி
ஆராச்ய்ச்சி உதவியாளர் - மதப்பீசு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறை - 3,62,000 - ரூ.1,16,600
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
எழுத்துத் தேர்வு - ரூ.150
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கான தேர்வுக் கட்டணம் - ரூ.100
தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்:
ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம்,வேலூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
- இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண், இட ஒதுக்கீட்டு விதி ஆகியற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் சரிபார்க்க இணையவழிச் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின் தெரிவுக்கு தகுதியுடைய விண்ணப்பதார்கள் மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர்.
- தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
- தமிழ்வழிக் கல்வி படித்த நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.07.2023
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/english/10_2023_JSO_ENG.pdf- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.