தமிழ்நாடு வனப்பணி துறையில் காலியாக உள்ள உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தொகுதி 1A பிரிவின் கீழ் தேர்வு நடைபெற்று தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

Continues below advertisement

பணி விவரம்:

உதவி வனப் பாதுகாவலர்

Continues below advertisement

மொத்த காலிப்பணியிடங்கள் : 9

கல்வித் தகுதி: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து அறிவியல் அல்லது பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், கீழே கொடுக்கப்பட்டுள்ள துறைகளிலும் இளங்கலை பட்டம் முடித்திருப்பவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம். 

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வழங்கப்பட உள்ளது. 

வயது வரம்பு: 

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 தேதியின் படி 21 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதை அறிவிப்பின் விவரத்தை படித்து தெரிந்து கொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை:

இந்தப் பணிக்கு முதன்மை எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, நேர்காணல் மற்றும் வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு ஆகிவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

முதல்நிலைத் பாடத் திட்டம்:

முதன்மைநிலைத் தேர்வு பாடத்திட்டம்:

உடல் தகுதி :

ஒரு முறை பதிவு/ நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

தேர்வு மையங்கள்:

இந்தப் பணிக்கு சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருநெல்வேலி, திருச்சி, சேலம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவு மூலமாக (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறையில் பதிவு செய்த விண்ணப்பங்கள் பதிவு செய்த நாளிலிருந்து 5 ஆண்டு காலங்களுக்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். நிரந்தர பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு கட்டணம் – ரூ .150

முதல்நிலைத் தேர்வு - ரூ.100

முதன்மை எழுத்துத் தேர்வு– ரூ.200

எப்படி விண்ணப்பிப்பது?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க விரும்புவோர்  https://apply.tnpscexams.in/ என்ற லிங்கை கிளிக் செய்யவும்,

அறிவிப்பின் முழு விவரம்- https://tnpsc.gov.in/Document/tamil/36_2022_ACF_TAM.pdf- என்ற லிங்கை கிளிக் செய்து காணவும்.

முக்கியமான நாட்கள்:

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.01.2023 இரவு 11.59 வரை

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள் : 30.04.2023