மதுரை இராஜாஜி மருத்துவமனையில் SNCU பிரிவிற்காக தேசிய நலக் குழுமத்தின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


பணி விவரம்:



  • தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)

  • காவலர்

  • பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்

  • தூய்மைப் பணியாளர் 

  • காவலர் 


இந்தப் பணியிடங்கள் தேசிய நலக் குழுமத்தின் (National Health Mission) கீழ் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட உள்ளன. (தேசிய நல குழுமம் – தற்காலிக பணி வாய்ப்பு/ National Health Mission - Temporary Vacancy)


கல்வித் தகுதி: 



  • டேட்டா எண்ட்ரி ஆப்ரேட்டர் பணிக்கு கம்யூட்டர் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

  • எஸ்.எம்.சி.யூ. பிரிவில் உள்ள காவலர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திர்க்க வேண்டும். முன்னாள இராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்/. 

  • பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

  • தூய்மைப் பணியாளர் பணிக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். 

  • De-Addiction Centre பிரிவில் உள்ள காவலர் பணிக்கு எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். முன்னாள் இராணுவத்தினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 


இதற்கு எதாவது ஒரு பணியிடத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஊதிய விவரம்:



  • தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) - ரூ.10,000

  • காவலர் - ரூ.8,500

  • பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் - ரூ.5,000

  • தூய்மைப் பணியாளர் - ரூ.5,000

  • காவலர் - ரூ.6,3000


நிபந்தனைகள்:


 இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.


 பணியில் சேருவதற்கான சுய விருப்பு ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்


மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய  விண்ணப்பம் மற்றும் தகுதி சான்றுகளுடன் வரும் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.


எப்படி விண்ணப்பிப்பது? 


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதுடன், தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அஞ்சலிலோ அல்லது நேரிலோ சமர்பிக்க வேண்டும்.


 விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


முதல்வர்,


அரசு இராசாசி மருத்துவமனை,


மதுரை- 20,


பிரிவு பொது - 8 (G8) ஆகும்.


விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.01.2023 மாலை 5 மணி வரை


https://cdn.s3waas.gov.in/s3f5f8590cd58a54e94377e6ae2eded4d9/uploads/2023/01/2023010346.pdf- என்ற லிங்க் மூலம் அறிவிப்பின் முழு விவரத்தி அறிந்து கொள்ளலாம்.