தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் மேலாளர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை தற்காலிக பணி அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஹவுஸ் கீப்பிங்க, மார்கெட்டிங், Boating and Adventure Tourism உள்ளிட்ட பிரிவுகளில் பணியாட்கள் தேவைப்படுவதாகவும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
பணி மற்றும் ஊதிய விவரம்:
Hospitality, AGM/ Manager – F&B ,Housekeeping, AGM/ Manager ஆகிய பிரிவுகளில் மாத ஊதியமாக ரூ.70,00 - ரூ.1,00,000 வரை வழங்கப்பட இருக்கிறது.
Sr. Associate/ Associate – F&B , Sr. Associate/ Associate – Housekeeping, Sr. Associate/ Associate –Yatri Nivas உள்ளிட்ட சீனிரியர் அசோசியேட் பிரிவுகளில்
உள்ள பணிக்கு மாதம் ரூ.40,000 முதல் ரூ.70,000 வரை வழங்கப்படும்.
Tourism - AGM/ Manager - Boating and Adventure Tourism , Manager – Package Tours உள்ளிட்ட பிரிவுகளில் சம்பளம் மாதம் ரூ.70,00 முதல் ரூ.1,00,000 வரை வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள பணிகளுக்கு ஏற்ப, 30 முதல் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறிப்பிடப்பட்டுள்ள துறைகளில் டிப்ளமோ, இளநிலை, முதுநிலைப் பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு நேர்முக தேர்வு அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதார்கள் தங்கள் சுயவிவரம் அடங்கிய விண்ணப்பத்துடன், சான்றிதழ் நகல்களுடன் hr@ttdconline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.08.2022
கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள http://ttdc.co.in/newweb/job/Recruitment_notice.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்