எம்ஆர்பி எனப்படும் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம், தமிழக மருத்துவத் துறையில் காலியாக உள்ள ரேடியோகிராபர் (Radiographer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Continues below advertisement

பணியிட விவரங்கள்


மொத்தம் 67 ரேடியோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் வகுப்பு வாரியாக இடஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

கல்வித் தகுதி என்ன?


விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் கொண்ட 'ரேடியோ டயக்னோசிஸ் டெக்னாலஜி' (Diploma in Radio Diagnosis Technology) டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது பிஎஸ்சி (Radiography and Imaging Technology) போன்ற தொடர்புடைய இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை (Pay Matrix Level – 11) ஊதியம் வழங்கப்படும்.

வயது வரம்பு (01.07.2025 தேதியின்படி)

தேர்வர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி ஆயிருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC/DNC, BC, BCM பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பொதுப் பிரிவினருக்கு (OC) அதிகபட்ச வயது 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு).

தேர்வு முறை

இந்தப் பணிக்கு நேர்முகத் தேர்வு (Interview) கிடையாது. விண்ணப்பதாரர்கள் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு, மேல்நிலைப்பள்ளி (HSC) மற்றும் பத்தாம் வகுப்பில் (SSLC) பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்

  • எஸ்சி, எஸ்சி அருந்ததியினர், எஸ்டி, மாற்றுத்திறனாளிகள்: ரூ.300/-

  • மற்ற பிரிவினர்: ரூ.600/-

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமுள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 04.01.2026 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்தில் உள்ள https://tnmrbrgw25.onlineregistrationform.org/MRBRGW/instructions2.jsp என்ற விரிவான அறிவிப்பைப் பார்வையிடலாம்.

மெயில் முகவரி: mrbrgw2025@onlineregistrationform.org

தொழில்நுட்ப சந்தேகங்கள்: 022 42706513

தகுதி தொடர்பான கேள்விகளுக்கு: 044 24355757