திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 24 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மே 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
தமிழக அரசில் ஏதாவதொரு துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்நிலையில் தான் இவர்களின் கனவை நினவாக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட வருவாய்த்துறையில் காலியாக உள்ள 24 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு முடித்திருந்தால் போதும் என தெரிவிக்கப்படும் நிலையில், இப்பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? தேர்வு செய்யும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.
திருப்பூர் மாவட்ட அலுவலக உதவியாளர் (Office Assistant) பணிக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் - 24
கல்வித் தகுதி :
திருப்பூர் மாவட்ட அலுவலக உதவியாளர் பணியிடங்களை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருந்தால் போதும்.
வயது வரம்பு:
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மேலும் அரசு விதிகளின் படி எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், Bc/MBC/DNC பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் முதலில், https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/04/2022041367.pdf என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்படிவத்தை முதலில் டவுன்லோடு செய்து பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும்.
பின்னர் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள வயது, கல்வித்தகுதி, கல்விச்சான்றிதழ் போன்றஅனைத்து விபரங்களையும், எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்துக்கொண்டு அஞ்சல் வழியாக அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட ஆட்சியர்,
வருவாய்த்துறை அ-பிரிவு,
அறை எண் 224.
இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு.
திருப்பூர் – 641604
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மே 15, 2022
தேர்வு செய்யும் முறை:
மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதார்கள் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்:
நேர்முகத் தேர்வில் தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 15, 700 முதல் 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/04/2022041367.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.