இந்திய உளவுத்துறை பணியகத்தில் காலியாக உள்ள கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொடர்பியல் பிரிவில் உதவி புலனாய்வு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற மே 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவருகிறது உளவுத்துறை பிரிவு (Intelligence). இங்கு பல்வேறு துறைகளின் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது உதவி புலனாய்வு அலுவலர் ( தொழில்நுட்பம்) -Assistant Central Intelligence office என 150 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதி? விண்ணப்பிக்கும் முறை? குறித்து அறிந்து கொள்வோம்.
உதவி புலனாய்வு அலுவலர் (தொழில்நுட்பம்) ( Assistant Central Intelligence officer) பணியிடங்களுக்கானத் தகுதிகள்:
மொத்த காலிப்பணியிடங்கள் – 150
கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் - 56
மிண்ணனு மற்றும் தகவல் தொடர்பியல் – 94
கல்வித்தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E or B.Tech in Electronics/ Electronics and Telecommunication/ Electronics and communication/ Electrical and Electronics / Information Technology / Computer science/ Computer Engineering (or) Master’s Degree in Electronics/ Physics/ Computer applications ஆகிய பிரிவுகளில் படித்து முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
SC/ ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் என வயது வரம்பில் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://mharecruitment.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி – மே 7, 2022
தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் 2022 ஆம் ஆண்டில் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் இவர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும். இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள விபரம்:
மேற்கண்ட முறைகளில் தேர்வாகும் நபர்களுக்கு ரூ. 44,900 – 1,42,400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே ஆர்வமுள்ள பொறியியல் பட்டதாரிகள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துப் பயன்பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.mha.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம்.