பெண்கள் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சகம்  வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணிநேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்குவதற்கான நோக்கத்துடன் பெண்கள் உதவி மையத்தை அமைக்க ஒரு புதிய திட்டத்தை தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.


பெண்கள் பாதுகாப்பு மையம்:


அதில் ஒன்றான ஒருங்கிணைந்த சேவை மையம் (OSC), பெண்கள் உதவி மையம் (181) போன்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.


இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக மருத்துவ உதவி, ஆலோசனை, சட்டம், உளவியல் மற்றும் உணர்வியல் ரீதியான ஆதரவு வேண்டியுள்ள ஒவ்வொரு மகளிரும் பயனடையும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தொகுப்பூதிய / ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய கீழ்கண்ட தகுதிகள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


திருப்பூரில் உள்ள அலுவலகத்தில் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


பணி விவரம்:


மைய நிர்வாகி


மூத்த ஆலோசகர்


தகவல் தொழில்நுட்ப பணியாளர் 


களப்பணியாளர்


பல்நோக்கு உதவியாளர்


பாதுகாவலர் / ஓட்டுநர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்



  • மைய நிர்வாகி பணிக்கு சோஷியல் ஒர்க் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்,

  • அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்புப் பணியாளராக பணியாற்றிய அனுபவம் மற்றும் உள்ளூரைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

  • வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

  • திருப்பூரைச் சேர்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

  • பன்முக உதவியாளார் பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். சமையல் தெரிந்திருக்க வேண்டும். 

  • 181 மற்றும் இதர உதவி  எண்கள் மூலம் வரும் தொடர்பான அழைப்பு உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும்  எண்ணம் கொண்டவராக வேண்டும்.

  • தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


மைய நிர்வாகி - ரூ.30,000/-


மூத்த அலோசகர் - ரூ.20,000/-


தகவல் தொழில்நுட்ப பணியாளர்= ரூ.18,000/- 


களப்பணியாளர் - ரூ.15,000/-


பல்நோக்கு உதவியாளர் - ரூ.6,400/-


பாதுகாவலர் / ஓட்டுநர் - ரூ.ரூ.10,000/-


வயது வரம்பு:


இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படுவது எப்படி?


இந்த வேலைவாய்ப்பிற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிப்பது எப்படி?


இந்த பதவிகளுக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நேரிடையாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:


சமூகநல அலுவலர், 
அறை எண்,35,36 தரை தளம், 
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
திருப்பூர்


 மின்னஞ்சல் முகவரி - chndswosouth@gmail.com 


விண்ணப்பிக்க கடைசி நாள் - 15/10/2023


https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2023/10/2023100384.pdf  - என்ற இணைப்பை க்ளிக் செய்து வேலைவாய்ப்பு அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.